கொந்தளிப்புடன் காணப்படும் புதுச்சேரி கடல்!
சென்னையை நெருங்கும் தீவிரப் புயல் நிவர்!
சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிரப் புயலாக நாளை மறுநாள் பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இதனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதலே கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 89 முதல் 117 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நாகப்பட்டினம், கடலூர், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Also Read: `தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிவர்!’ - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
source https://www.vikatan.com/news/general-news/nivar-cyclone-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக