"பேரூராட்சிகளில் கடைநிலையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்திருக்கிறார்கள். இந்த ஊதியக்குறைப்புதான், பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு தரும் பருசா?" என்று ஊழியர்கள் வேதனையாக கேள்விஎழுப்புகிறார்கள்.
Also Read: கரூர்: `தி.மு.க பிரமுகர் இறப்புக்கு காரணம் போலீஸ்தான்!’ - செந்தில் பாலாஜி ஆவேசம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் கலந்தாய்வு கூட்டம், கரூரில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சி.பழனிவேல் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதோடு இந்தக் கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களின் சங்க மாநில தலைவர் கு.சரவணன், பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் வெ.சிவக்குமார், கரூர் மாவட்ட பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் உதயக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் என்று ஏராளமானோர் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசங்கள் அணிந்தும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், ``பேரூராட்சி துறையில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களின் தர ஊதியம் 1,900 லிருந்து ரூ 1,300 ஆக குறைத்து கடந்த மாதம் 7-ம் தேதி சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 6 ஆயிரம் முதல் ரூ 7 ஆயிரம் வரை ஊதியக்குறைப்பு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்யக் கோரி வரும் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பாக, மாலை 5 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் சம்பளம் இவ்வளவு குறைக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஊதியகுறைப்பு நடவடிக்கைதான், அரசு அவர்களுக்கு தரும் தீபாவளி பரிசா?. பேரூராட்சி பணியாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர், தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளில், குடிநீர் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இயக்குநர் இந்த சம்பளக்குறைப்பு உத்தரவை திரும்ப பெறணும்" என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/local-administration-workers-protest-against-salary-reduction-order
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக