விஜய் ஹசாரே தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி கலக்கியிருக்கிறார். தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து முந்தைய சாதனைகள் பலவற்றை உடைத்திருந்தார். 'ஆனந்த விகடன்' இதழுக்காக நாரயண் ஜெகதீசன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே..
இந்தத் தொடருக்கு முன்பாக இந்த ஆண்டில் நீங்கள் ஆடிய சில தொடர்களில் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. அது சார்ந்த அழுத்தம் ஏதும் இந்தத் தொடரில் இருந்ததா?
ரன்கள் அடிக்கிறோமோ இல்லையோ எல்லா உள்ளூர் போட்டிகளுமே மனரீதியாக அழுத்தமிக்கதுதான். உள்ளூர் அணிகள் அத்தனையும் பயங்கர ஸ்ட்ராங்காதான் இருக்காங்க. மேலும், இது மழைக்காலம்கிறதால பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சவால் அதிகம். ரெண்டு சீரிஸ்ல ரன் அடிக்கலைன்னு அந்த ப்ரஷரையும் சேர்த்துக்கிட்டா என்னால் சரியா பெர்ஃபார்ம் பண்ணவே முடியாது. அதுனால அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்ல. அதேநேரத்தில் பேட்டிங் டெக்னிக் விஷயத்தில் தினந்தோறும் எதோ ஒன்ன கத்துக்கிட்டு முன்னேறிக்கிட்டே இருக்கனுங்றதுல உறுதியாவே இருக்கேன். இந்தத் தொடருக்கு முன்பாகவும் வலைப்பயிற்சியில் கொஞ்சம் வித்தியாசமாக புதுசா சில ஷாட்கள் ஆட பயிற்சி செஞ்சேன். கேம்ல நல்ல செட்டில் ஆன பிறகு அந்த ஷாட்ஸ சரியா எந்த பிசிறும் இல்லாம ஆடுறதுலயும் அதிக கவனம் செலுத்தினேன்.
நான் ஸ்ட்ரைக்கரை பௌலர்கள் ரன் அவுட் (மன்கட்) ஆக்கும் முறை உலகளவிலேயே பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. TNPL இல் உங்களையும் அப்படி ரன் அவுட் செய்திருந்தார்கள். அதற்கு கடுமையாக ரியாக்ட்டும் செய்திரிந்தீர்கள். இந்த ரன் அவுட் விஷயத்தில் ரூல்ஸ் மற்றும் ஸ்பிரிட் என இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. நீங்கள் எந்த பக்கம்?
கண்டிப்பாக, ஸ்பிரிட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்தான் முக்கியம். ஆனா, இந்த மாதிரியான ரன் அவுட்கள் தொடர்ச்சியாக நடக்குறப்ப எல்லாருமே ஒரு புரிதலுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. என்னதான் ஸ்பிரிட்தான் முக்கியம்னு பேசுனாலும் விதிமுறைய ஃபாலோ பண்றதே பெட்டர்னு நினைக்கிறாங்க. நானும் அப்டி அவுட் ஆகியிருக்கேன். ஒவ்வொரு முறையும் அதை பத்தி புகார் சொல்லிக்கிட்டே இருக்காம, இனிமே கொஞ்சம் கவனமாவும் பாதுகப்பாவும் க்ரீஸூக்குள்ளேயே இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.
முழுமையான பேட்டி இந்த வார 'ஆனந்த விகடன்' இதழில் வெளியாகியிருக்கிறது. அதை படிக்க கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும் - லிங்க்
source https://sports.vikatan.com/cricket/tamilnadu-cricketer-jagadeesan-exclusive-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக