அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு வந்திருந்தார். தொடர்ந்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மகளுடன் வந்த அவர், அம்மன் சன்னிதியில் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு இவற்றை எல்லாம் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஆங்கில பத்திரிகைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாராட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து 4 ஆண்டுகள் பொருளாதாரம், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, உற்பத்திதுறை மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு செய்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதுதான் உண்மை நிலவரம். இந்த உழைப்பு அ.தி.மு.க-வினுடையது. ஆனால் தி.மு.க-வினர், என்னவோ அவர்களின் உழைப்பினாலும் திட்டங்களாலும்தான் தமிழகம் முதலிடத்தில் இருப்பதுபோன்றதொரு பிம்பத்தை பத்திரிகைகள் மூலம் உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆகவே தி.மு.க அரசு, விளம்பர வெளிச்சத்தில்தான் செயல்படுகிறது. உண்மையான வெளிச்சத்தை தமிழ்நாட்டுக்கு தரவில்லை" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ex-minister-rb-udhayakumar-meet-press-people-in-sattur-irukankudi-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக