Ad

வியாழன், 29 டிசம்பர், 2022

புதுக்கோட்டை: பைக்கில் சென்ற இளைஞர் வெட்டிப் படுகொலை! - மர்ம கும்பல் வெறிச்செயல்

புதுக்கோட்டை தொண்டைமான் நகரைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் நகர் மன்ற உறுப்பினர் சின்னையாவின் தம்பி மகன் ஆவார். நேற்று மாலை கலையரசன் தனது வீட்டிலிருந்து, டூவீலரில் புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து சற்று தொலைவிலேயே, அவரை வேகமாகப் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று பைக்கில் சென்ற கலையரசனை, கண் இமைக்கும் நேரத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதில், படுகாயமடைந்த கலையரசன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கலையரசன்

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நகர் போலீஸார், கலையரசனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான கலையரசன் குடும்பத்துக்கும், அவரின் உறவினர்கள் குடும்பத்தினருக்கும், குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், உறவினர்களாலே கலையரசன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை

சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரௌடி இளவரசன் புதுக்கோட்டையில் பட்டப் பகலிலேயே கொடூரமான முறையில் பெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இதேபோல், பொன்னமராவதியிலும் கடந்த வாரம் வீட்டிலேயே வைத்து தாயையும், மகனையும் கொலைசெய்துவிட்டு, மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கின்றனர். கடந்த வாரம், இநத வாரம் என அடுத்தடுத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் புதுக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/youth-murdered-in-pudukottai-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக