Ad

வியாழன், 29 டிசம்பர், 2022

Doctor Vikatan: பேருந்து இருக்கையில் மோதி உடைந்த பற்கள்... பழையபடி சீராக்க வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு வயது 30. இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையின் கம்பியில் மோதி பற்களில் அடிபட்டது. சில பற்கள் உதிர்ந்துவிட்டன. இன்னும் சில பற்கள் ஆடுகின்றன. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய நிலையைப் பார்த்து என் தோழி மிகவும் வருந்துகிறாள். அவனுக்கு பற்களை முன்பு போல சீராக்க முடியுமா? அதிக செலவாகுமா?

- அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

மரியம் சஃபி | நாகர்கோவில்

முதல் வேலையாக உங்கள் தோழியின் மகனை பல் மருத்துவரை அணுகச் சொல்லுங்கள். மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு, பற்களின் நிலை அறிந்து தேவைப்பட்டால் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைப்பார். எலும்புகளின் அடர்த்தி, பற்கள் தவிர வேறு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்.

இவற்றை வைத்துதான் அடுத்து சிகிச்சை பற்றி யோசிக்க முடியும். உடைந்த பற்களை சீராக்க இன்று நிறையவிதமான நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. செயற்கைப் பல் பொருத்துவதிலிருந்து, இம்ப்ளான்ட் வரை நவீனமான பல சிகிச்சைகள் இருக்கின்றன. இம்ப்ளான்ட் சிகிச்சையில் ஸ்க்ரூ பொருத்தி, அதன் மேல் நிரந்தரமாக செயற்கைப் பல்லைப் பொருத்த முடியும்.

பல் சிகிச்சை

எனவே இந்த விஷயம் குறித்து உங்கள் தோழி கவலைப்படவே தேவையில்லை. சரியான மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியதுதான் இதில் முக்கியம். செலவு பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்... அது உங்கள் தோழியின் மகனுக்கு கொடுக்கப்படுகிற சிகிச்சையைப் பொறுத்து மாறும். அரசு மருத்துவமனையிலா, தனியார் மருத்துவமனையிலா.... எதில் சிகிச்சை எடுக்கிறார் என்பதைப் பொறுத்தும் அது வேறுபடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-broken-teeth-is-there-a-chance-to-fix-them

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக