Ad

வியாழன், 29 டிசம்பர், 2022

`அம்மா, பாட்டியின் குணம் கலந்த பெண் வேண்டும்' - இணை குறித்த விருப்பம் தெரிவித்த ராகுல் காந்தி!

தனக்கு வரவிருக்கும் வாழ்க்கைத்துணையை குறித்து பலருக்கும்  எதிர்பார்ப்புகள் இருக்கும். காலம் முழுவதும் தன்னுடன் வாழப் போகும் இணை, இப்படிதான் இருக்க வேண்டும் சில நெறிகளை விதித்து, அதற்கேற்றாற்போல இணையைத் தேடுபவர்கள் அநேகம். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல.

Marriage (Representational Image)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வயது 52. அவர் `பாரத் ஜோடோ யாத்ரா’ பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். அவரிடம் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணல் செய்தது. அதில் `உங்களைப் போன்ற ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் செட்டில் ஆவீர்களா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ``இது சுவாரஸ்யமான கேள்வி. நான் ஒரு பெண்ணை விரும்பலாம். அது விஷயமல்ல. அவரிடம் என்னுடைய அம்மா மற்றும் பாட்டியின் குணங்கள் கலந்த கலவை இருந்தால் நன்றாக இருக்கும். 

என் வாழ்வின் அன்பு மற்றும் என் இரண்டாவது தாய் என்னுடைய பாட்டி’’ என்று கூறியுள்ளார்.

இந்திரா காந்தி-சோனியா காந்தி

தன்னுடைய அம்மா சோனியா காந்தியின் குணங்களும், தன்னுடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் குணங்களும் தன்னுடைய வருங்கால இணைக்கு இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளது, அனைவரின் கவனத்தையும் பெற்று பேசுபொருளாகி இருக்கிறது.



source https://www.vikatan.com/news/india/rahul-gandhi-expects-life-partner-with-mixed-qualities-of-mother-and-grandmother

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக