Ad

திங்கள், 26 டிசம்பர், 2022

Doctor Vikatan: வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?

Doctor Vikatan: நீரிழிவுக்கும் நடைப்பயிற்சிக்கும் என்ன தொடர்பு? நீரிழிவு உள்ளவர்களை வாக்கிங் போகச் சொல்லி வலியுறுத்துவது ஏன்? அதன் விளைவாக நீரிழிவு கட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்

நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும். நடக்கும்போது அந்தச் சர்க்கரையானது தசைகளுக்குள் சென்று, தசைகளால் அது பயன்படுத்தப்பட்டு விடும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு குறையும். அதன் காரணமாகவே நீரிழிவு உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி முக்கியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் சுலபம்.

உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நீரிழிவு நோய்

நடைப்பயிற்சி என்றில்லை, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதுகூட நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சிதான். வாக்கிங்கோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதோ, மலையேற்றமோ.... நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏதேனும் ஓர் உடற்பயிற்சி முக்கியம் என்பதுதான் இதன் அர்த்தம். வாய்ப்பு உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் வொர்க் அவுட் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-diabetes-can-be-controlled-by-walking

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக