Ad

புதன், 21 டிசம்பர், 2022

``விவசாயிகள் முன் 56 இன்ச் மார்பு; சீனா முன் 0.56 இன்ச் மார்பு" - மத்திய அரசை விமர்சித்த ஆம் ஆத்மி

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லைப்பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த மோதல் தொடர்பாக அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தரப்பிலிருந்து, `சீனா போருக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது' என ராகுல் காந்தியும், `சீனா விவகாரத்தில் அரசு சிங்கம் போல் பேசுகிறது. ஆனால் எலி போல் செயல்படுகிறது' என மல்லிகார்ஜுன கார்கேவும் மத்திய அரசை விமர்சித்தனர்.

இந்தியா - சீனா ராணுவ மோதல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட, `சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நம் நிறுத்தக்கூடாது' என்று கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் சீன ஆக்கிரமிப்பு பற்றி விவாதிக்கக் கோரி ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சஞ்சய் சிங்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், ``இந்திய-சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் குறித்து இந்த நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு முன்னால் இந்த அரசாங்கம் தன்னுடைய 56 இன்ச் மார்பைக் காட்டி பெருமை கொள்கிறது. அதுவே சீனாவுக்கு முன் 0.56 இன்ச் மார்பாக மாறுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசாங்கம் ஏன் இதைச் செய்கிறது. எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நம் ராணுவ வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இருந்தும் ஏன் இந்த அரசு சீனாவுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது" என்று மத்திய அரசை விமர்சித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aap-mp-sanjay-singh-slams-bjp-led-central-govt-by-56-inch-chest-in-indo-china-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக