இன்று சர்வதேச அளவில் தனது ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் களம் காண்கிறது இந்திய அணி.
இந்த மைல்கல்லை எட்டும் முதல் சர்வதேச அணி இந்தியாதான்.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக இப்பட்டியலில் இருக்கும் மற்ற அணிகள் ஆஸ்திரேலியா (958 போட்டிகள்), பாகிஸ்தான் (936 போட்டிகள்).
1974-ம் ஆண்டு இங்கிலாந்ததிற்கு எதிராக லீட்ஸ் நகரில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்தியா அதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
அன்றிலிருந்து சுமார் 48 ஆண்டுகளில் 999 போட்டிகளை விளையாடியுள்ள இந்தியா அதில் 518 வெற்றிகளையும் 431 தோல்விகளையும் பெற்றுள்ளது.
மீதமுள்ள 9 போட்டிகள் டையிலும், 41 போட்டிகள் முடிவுகளின்றி ரத்தும் செய்யப்பட்டன. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 54.54.
இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டியில் அஜய் வடேக்கரும், 100வது போட்டியில் கபில் தேவும், 500வது போட்டியில் சௌரவ் கங்குலியும் கேப்டன்களாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தியாவின் 700, 800, 900வது போட்டிகள் அனைத்திலும் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ். தோனி.
இந்த வரலாற்று சிறப்புமிக்க 1000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருப்பவர் ரோஹித் ஷர்மா.
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்களை அடித்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர். 463 போட்டிகளில் 49 சதங்கள், 96 அரைசதங்கள் உட்பட 18,426 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே எடுத்துள்ளார். 271 போட்டிகளில் 30.89 என்ற சராசரியுடன் 337 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர்.
source https://sports.vikatan.com/ampstories/cricket/team-india-stats-and-facts-of-the-first-nation-to-play-1000th-odi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக