Ad

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் நடிகர் விஜய்! Live Updates

``குறை கூறுவதால் தான் அவர் தான் முன்னாள் முதல்வர்” - கே.என் நேரு

திருச்சி தில்லைநகர் வார்டு 22-க்குட்பட்ட மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, ``நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். சேலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 1300 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

கே.என் நேரு

நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டி உள்ளது தொடர்பான கேள்விக்கு, ``குறை கூறுவதால் தான் அவர் தான் முன்னாள் முதல்வர்” என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறை திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கோவையில் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய்:

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
நடிகர் விஜய்
நடிகர் விஜய்

சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்தது அதிகம் கவனம் ஈர்த்த நிலையில், இந்த முறை காரில் வந்திருந்தார்.

வாக்களித்தார் ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

அதே போன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் தங்களின் வாக்குச்சாவடிகளில், காலையில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

தொடங்கியது வாக்குப்பதிவு!

85 வயது மூதாட்டி சுப்புலட்சுமி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கோவை சித்தாபுதூர் வாக்குச்சாவடி மையத்தில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார் 85 வயது மூதாட்டி சுப்புலட்சுமி.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குகிறது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரங்களெல்லாம் நேற்று முந்தினம் மாலை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புகளெல்லாம் தேர்தல் ஆணையத்தால் பலப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்க இருக்கிறது.

சில புள்ளி விவரங்கள்..

மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

மாநகராட்சி - 21

நகராட்சி - 138

பேரூராட்சி - 490.

மாநில தேர்தல் ஆணையம்

21 மாநகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 1,374, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 4, தேர்தல் நடக்கும் வார்டுகளின் எண்ணிக்கை - 1,370, போட்டியிடுவோர் - 11,196.

138 நகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 3,843, இவற்றில், போட்டியின்றி தேர்வானவர்கள் - 18, தேர்தல் நடக்கும் வார்டுகள் - 3,825, போட்டியிடுவோர் - 17,922.

490 பேரூராட்சிகளிலுள்ள வார்டுகள் - 7,609, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 196, தேர்தல் வார்டுகள் - 7,412, போட்டியிடுவோர்- 28,660.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மொத்த வார்டுகளில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 218.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

மொத்தமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள வார்டுகள் - 12,607. இவற்றில் போட்டியிடுவோரின் மொத்த எண்ணிக்கை - 57,778.

காஞ்சிபுரம் 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதால் இந்த வார்டுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு வேட்பாளர் அனுசுயா மற்றும் ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி வேட்பாளர் ஐயப்பன் உயிரிழந்ததால் இந்த வார்டுகளுக்குமான வாக்குப்பதிவும் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம், முதல்நிலை பேரூராட்சியின் 12-வது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டில் யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/election/live-updates-on-tamilnadu-urban-local-body-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக