என் வயது 27. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுவலி, நெஞ்சுவலி இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழலிலும் பித்தப்பையிலும் புண் இருப்பதாகச் சொல்லி மாத்திரை சாப்பிடச் சொன்னார் மருத்துவர். அந்த மாத்திரை சாப்பிட்டால் எனக்கு தூக்கம் வருகிறது. தற்போது எனக்கு உடல் எடை அதிகரித்துவிட்டது. என்னால் என் வேலைகளைக்கூட செய்ய முடியவில்லை. எப்போதும் உடல்வலி, கால்வலி இருந்துகொண்டே இருக்கிறது. களைப்பு, சோர்வும் இருக்கிறது. உடல் எடை குறைய என்ன செய்வது?
- கஜா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ.
``நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றிய தகவல்கள் இல்லை. அது தெரிந்தால்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதிக தூக்கம், அதிகரித்த உடல் எடை, களைப்பு, சோர்வு, உடல்வலி, கால்வலி என அனைத்துக்கும் அந்த மருந்துகளுடன் ஏதேனும் தொடர்புண்டா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தவிர, உடல் எடையைக் குறைப்பது என்பது பொதுவான ஆலோசனைகளால் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை.
உங்களுடைய பி.எம்.ஐ (உயரத்துக்கேற்ற எடை இருக்கிறீர்களா என்ற பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கு), உங்கள் வாழ்க்கைமுறை, உடலியக்கம், உணவுப் பழக்கம் என அனைத்தையும் ஆராய்ந்துதான் உங்களுக்கேற்ற சரியான, பிரத்யேக எடைக்குறைப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்க முடியும்.
எனவே, நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரங்கள், உங்கள் ஹெல்த் ரிப்போர்ட் என எல்லாவற்றுடனும் உடல் பருமன் சிகிச்சைக்கான மருத்துவரை அணுகி, அவரது பரிசோதனைக்குப் பிறகு அவர் பரிந்துரைக்கும் விஷயங்களைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/will-tablets-taken-for-gall-bladder-ulcer-lead-to-increase-in-body-weight
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக