Ad

வியாழன், 24 பிப்ரவரி, 2022

`உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை!" - கைவிட்ட நேட்டோ... என்ன காரணம்?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்தி வருகிறது.

விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த போர் சூழல் தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்டோல்டென்பெர்க் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ``நேட்டோ பாதுகாப்பு அமைப்புத் திட்டங்களை இன்று நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு உறுதுணையாக இருக்கும்.

நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் நமது ராணுவ தளபதிகள் தேவைப்படும் இடங்களில் படைகளை அதிகரித்துக் கொள்ளமுடியும். நேட்டோ கூட்டமைப்பில் உள்ள கிழக்குப் பகுதி நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 120-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

உக்ரைன் - ரஷ்யா

ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து எங்கள் கூட்டணி நாடுகளைப் பாதுகாக்கத் தயார் நிலையில் உள்ளோம். ஆனாலும் தற்போது எங்கள் கூட்டணியில் இல்லாத உக்ரைனுக்கு எந்த படைகளையும் அனுப்பும் திட்டம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/no-plans-to-send-troops-to-ukraine-says-nato

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக