Ad

புதன், 16 பிப்ரவரி, 2022

பஞ்சாப்: `தேர்தல் நடத்தை விதிகள்... ரூ.449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!’ -தேர்தல் ஆணையம்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை வெளியிட்ட நாளிலிருந்தே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் அளிக்கக்கூடாது, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடங்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் பிரசாரம் நடத்த தடை, வாக்கு பதிவு நடைபெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி போன்ற தேர்தல் நடத்தை விதிகள் பஞ்சாப்பில் அமலில் இருந்து வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ரூ. 449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ் கருணா ராஜு தெரிவித்துள்ளார். அதில், ரூ. 30.37 கோடி மதிப்பிலான 50.19 லட்சம் லிட்டர் மதுபானங்கள், ரூ. 30.77 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் ஆக்கியவற்றை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்திருப்பதாகவும், ரூ. 325.87 கோடி ரூபாய் மதிப்பிலான சைக்கோட்ரோபிக் பொருட்கள்(psychotropic substances) அமலாக்கத்துறையினர் மீட்டிருப்பதாகவும் எஸ் கருணா ராஜு குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/punjab-election-commission-told-rs-44955-crores-seized-in-punjab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக