Ad

வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஆளுநர் மகள் திருமணம்... வி.வி.ஐ.பி கெஸ்ட்டுகள் வருகை?! - களைகட்டும் `ஊட்டி ராஜ்பவன்’

தமிழகத்தில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்திற்குள் அமைந்திருக்கும் `ஊட்டி ராஜ்பவன்’ ஆளுநரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக இருந்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தொட்டபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த மாளிகை பெரும்பாலான ஆளுநர்களின் விருப்பத்துக்கு உரிய மாளிகையாக இருந்து வந்திருக்கிறது.

ரவி

தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் விருப்பத்துக்குரிய மாளிகையாகவும் மாறியிருக்கிறது. இந்த மாளிகையில் தனது மகளின் திருமண விழாவை நடத்த திட்டமிட்ட ஆளுநர், அதற்கான ஏற்பாடுகளை ஜனவரி மாதத்தில் இருந்தே மேற்கொண்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை புதுப்பொலிவுப்படுத்துவது முதல் வி.வி.ஐ.பி கெஸ்ட்டுகள் வந்து தங்குவதற்கு ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகை மற்றும் தனியார் நட்சத்திர தங்கும் விடுதிகளை நேரில் சென்று பார்வையிட்டது வரை அனைத்து பணிகளையும் முன்னின்று செய்து வருகிறார்.

வருகின்ற 21, 22 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது. முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஊட்டி வந்தடைந்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் மலர் கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் ராஜ்பவன் மாளிகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முக்கிய தலைவர்கள் வர இருப்பதாகவும் 21, 22-ம் தேதிகளில் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு 24ம் தேதி குடும்பத்துடன் ஆளுநர் சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தில் கலந்துகொள்ளும் வி.ஐ.பி களின் பட்டியல் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-governor-daughters-wedding-at-ooty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக