Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

திருவாரூரில் திமுக தம்பதியை வென்ற அதிமுக தம்பதி! - உள்ளாட்சி சுவாரஸ்யம்

திருவாரூர் நகராட்சியில் கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு, இருவருமே வெற்றிப் பெற்றிருப்பது, இப்பகுதி மக்களிடையே முக்கிய பேசுப் பொருளாக உள்ளது. திமுக-வின் கோட்டையாக கருதப்படும் திருவாரூரில் அதிமுக வேட்பாளர்களாக இந்த இருவரும் களமிறங்கி வெற்றிப் பெற்றிருப்பது சாதனையாகவே பேசப்படுகிறது. இவர்கள் போட்டியிட்ட வார்டுகளில் திமுக சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கி தோல்வியை சந்தித்தவர்களும் தம்பதியரே என்பது இதில் குறிப்பிட்டத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையம்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கொராடச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணியே வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில்தான் திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1-வது வார்டில் அதிமுக சார்பில் சார்பில் வேட்பாளராக களமிறங்கிய கலியபெருமாளும், 2-வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவரின் மனைவி மலர்விழியும் வெற்றிப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.

திருவாருர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள். 1-வது வார்டில் திமுக சார்பில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து, கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள் களமிறங்கினார். 2-வது வார்டில் பாலமுருகனின் மனைவி கவிதா, திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இதே வார்டில் அதிமுக வேட்பாளராக கலியபெருமாளின் மனைவி மலர்விழி போட்டியிட்டார். சபாஷ்... சரியான போட்டி...

இந்த இரு தம்பதிகளில் எந்த தம்பதி வெற்றிப் பெறப் போகிறது என எதிர்பார்ப்பு எகிறியது. இந்த இரு தம்பதியரில் கணவனோ, மனைவியொ தோற்கக்கூடும் எனவும் பேச்சு நிலவியது. கலியபெருமாள் - மலர்விழி தம்பதி, பாலமுருகன் - கவிதா என இரு தம்பதியருமே திருவாரூரில் நன்கு அறியப்பட்டவர்கள்.

அதிமுக தம்பதி

குறிப்பாக இவர்கள் போட்டியிட்ட வார்டு மக்களிடம் நன்கு பரிச்சயமானவர்கள்.... தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களவும் களமிறங்கியதால், இவர்கள் யார் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில்தான் வாக்கு எண்ணிக்கையில், கலியபெருமாள் - மலர்விழி தம்பதியர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இதனால் இவர்களது வீடு வெற்றிக் கொண்டாடத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. உறவினர்கள், இவர்களது குடும்ப நண்பர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

இதேபோல் திருவாரூர் நகர்மன்ற தேர்தலில் திமுக தம்பதியர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். அதாவது, 14-வது வார்டில் செந்திலும், 9 வார்டில் போட்டியிட்ட இவருடைய மனைவி புவனபிரியாவும் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.



source https://www.vikatan.com/news/election/admk-couple-beat-dmk-couple-in-thiruvarur-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக