மாதங்களில் மகத்தான மாதம் மாசி. இது கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும் கூறப்படும்.
மாசி மகத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட எண்ணியவை ஈடேறும். 17-2-2022 நாளில் இந்த ஆண்டு மாசி மகம் வருகிறது.
மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம்' என்பர். இந்த நாளில் புனித நதிகளில் நீராடி ‘பிதுர் மகா ஸ்நானம்’ செய்தால் பித்ருக்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
கும்ப ராசியில் சூரியன் இருந்து, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளில் பௌர்ணமி வரும். இந்த பௌர்ணமி திருநாளை மாசி மகம் என்கிறோம்.
இந்த மாசி மகத்தின்போது நாம் செய்யும் எல்லாக் காரியங்களும் இரட்டிப்புப் பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
தோஷத்தால் பீடிக்கப்பட்ட வருணன், ஈசனின் கருணையால் விடுதலை பெற்ற நாள் மாசி மாத மகம். இதனாலேயே இந்நாள் நீராடும் நாளானது.
உமாதேவியார் மாசி மகத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
பெண்கள் விரதமிருந்து வழிபட வேண்டிய தினமாகவும் மாசிமகம் போற்றப்படுகிறது. இதனால் இது சுமங்கலி விரதம் இருக்கும் நாளாகவும் இருக்கிறது.
பாதாளத்தில் இருந்த பூமியைப் பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசிமக நாள்தான் என்கின்றன புராணங்கள்.
முருகப்பெருமான் தன் தந்தைக்கே குருவாக இருந்து மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான்.
மாசி மகத்தன்றுதான் காமதகன விழா தென்னகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
source https://www.vikatan.com/ampstories/spiritual/gods/masi-magam-festival-worship-lord-siva-in-masi-tamil-month
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக