ஐதராபாத், முச்சிந்தால் ஸ்ரீராம் நகரின் புதிய அடையாளம் ஆகிறது சமத்துவத்தின் சிலை எனப்படும் ஸ்ரீராமாநுஜரின் சிலை.
ஸ்ரீராமாநுஜரின் இந்த பிரமாண்டத் திருமேனி 216 அடி உயரம் கொண்டது.
பஞ்சலோகத்தினால் ஆன இந்தத் திருமேனி பத்ரவேதி என்னும் கட்டடத்தின் மீது அமைந்துள்ளது. இதற்கான மொத்த செலவு ரூபாய் ஆயிரம் கோடி.
பத்ராவேதி கட்டடத்தின் மீது 36 யானைகள் பத்ம பீடத்தைத் தாங்குகின்றன.
54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்குகள் மற்றும் 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீராமாநுஜரின் திருமேனி மட்டும் 108 அடி உயரம் கொண்டது. அவர் கையில் தாங்கியிருக்கும் திரி தண்டம் 135 அடி கொண்டது. அதன் எடை மட்டும் சுமார் 60,000 கிலோ என்கிறார்கள்.
ஸ்ரீராமாநுஜரின் திருமேனியைச் சுற்றி 108 திவ்ய தேசக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்ணைக்கவரும் வண்ண விளங்குகள் நிறைந்த செயற்கை நீரூற்றுத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அற்புதமான வளாகத்தை 5.2.2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இங்கு டிஜிட்டல் நூலகம் மற்றும் ராமாநுஜரின் வாழ்க்கை சம்பவங்கள் கொண்ட மின்னணுக்கண்காட்சி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
source https://www.vikatan.com/ampstories/spiritual/temples/ten-important-key-details-to-note-about-statue-of-equality-sri-ramanujar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக