Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

எழுத்தாளர் சுஜாதாவுடன் எனது நினைவுகள் #MyVikatan

‘யார் நீங்க, உங்கள யாரு வரச்சொன்னது?’ என்றார் சுஜாதா.எனக்கு பயத்தில் உடனே கழிவறைக்கு செல்ல வேண்டும் போலிருந்தது.உடுக்கை இழந்தவன் கைபோல, அவரின் இணையர் உதவிக்கு வந்தார்.’நான்தாங்க வரச்சொன்னேன். காலேஜ் பசங்க, புராஜக்ட் விஷயமாக பெங்களூரில் இருக்கிறார்கள். உங்களைப் பார்க்கவேண்டும் என்றார்கள்'.

இது நடந்த ஆண்டு 1993. அப்போது நாங்கள் ITI(Indian telephone industries)-ல் புராஜெக்ட் விஷயமாக அல்சூரில் தங்கி இருந்தோம். சுஜாதா BEL(Bharat electronics limited, Bangalore) வேலை செய்துகொண்டிருந்தார். ஆராய்ச்சிப் பிரிவில் புராஜெக்ட் தலைவர் என்று நினைக்கிறேன். அலுவலக குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்தார்.அவரது வீட்டு தொலைபேசி எண்ணை பல ஆராய்ச்சிகள் செய்து கண்டு பிடித்து விட்டேன். தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருந்தேன். திடீரென ஒரு நாள், நிஜ சுஜாதா போனை எடுத்தார். அவரிடம் நாங்கள் அய்யாவின் எழுத்துக்கு ரசிகர்கள், சேலத்திலிருந்து வருகிறோம். அய்யாவைப் பார்க்க அனுமதி வாங்கித் தர வேண்டும் எனக்கேட்டேன். கிழமையும் நேரமும் சொல்லி வைத்துவிட்டார். காற்றில் மிதப்பது போல உணர்ந்தேன்.

எப்படியோ நானும் என் நண்பன் அருள் பிரகாஷூம் பஸ் மாற்றி பஸ் மாற்றி முன்னதாகவே சென்று விட்டோம். வீட்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தோம். காரை கராஜில் நிறுத்தி விட்டு வந்தவர்தான் யார் வரச்சொன்னது எனக் கேட்டார்.

SUJATHA

பலமுறை நண்பர்களுடன் பேசி கேள்விகளுடன் சென்றிருந்தேன். பொறுமையாக பதிலளித்தார். பல கேள்விகள் அவர் அப்படிச் சொல்லியிருந்தார், தங்களின் கருத்து என்ன, என்பதாகவே இருந்தது. அது அவர்களைத்தான் கேட்கவேண்டும் என்று கூறினார். கமல்ஹாசன் பாடுவது பற்றிக் கேட்டபோது, இணையர் பதிலளித்தார் ’அவரவர்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதைத்தான் செய்யனும்’. அருமையான பில்டர் காபி கொடுத்தார். பத்திரிகையில் வெளியிடப் போகிறீர்களா எனக் கேட்டார். இல்லை என்று சொன்னேன்.இப்போது கேள்விகளும் இல்லை, புகைப்படமும் இல்லை. ஒரு பொக்கிஷத்தை எவ்வளவு அலட்சியமாக மிஸ் செய்திருக்கிறேன் என இப்போது வருத்தமாக இருக்கிறது.

அதற்குப் பிறகு, சேலம் தமிழ்ச்சங்க விழாவிற்கு (கவிஞர் க.வை.பழனிச்சாமி அவர்களின் ஏற்பாட்டில்) வந்திருந்தார். அவரின் ஆட்டோகிராப் வாங்க அடிதடி நடந்ததில், ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து நின்றேன்.

Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha
Sujatha

பிறிதொரு நாளில், சென்னையில், பாலகுமாரனுடன் கலந்து கொண்டார். சா.கந்தசாமி அவர்களுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன். என்னைப்பற்றி சா.கந்தசாமி விசாரிக்க, நான் ஒரு வாசகன் என்றேன். அவரின் உடல் மொழி மாறி, பீடத்தில் அமர்ந்து கொண்டார். விழா முடியும் வரை பேசவேயில்லை. பாலகுமாரன், ‘முதல்ல ரங்கராஜன் பேசட்டும் என்றார்'. பூப்போட்ட அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த பால் குமாரனை, கைத்தடியும் வெண் தாடியுடன் இறக்குமுன் பார்த்த போது மிகுந்த வருத்தமெனக்கு.

சுஜாதாவின் கணையாழி யின் கடைசி பக்கங்களை தொடர்ந்து படித்து வந்தேன். அவர் ஒரு அஷ்டாவதானி. பொறியாளர், கணிப்பொறி வல்லுநர்.மின்னணு வாக்குப்பெட்டி உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். சிங்கிள் என்ஜின் கிளைடர் விமானம் இயக்கத் தெரிந்தவர். கிடார் வாசிப்பார்.எழுத்தின் எல்லா வடிவங்களிலும் எழுதியவர். அவரின் ‘நகரம்’, ‘பிரிவோம், சந்திப்போம்' , ‘கணையாளியின் கடைசிப் பக்கங்கள்' மிகவும் பிடிக்கும். கமலின் விக்ரமிலிருந்து பல படங்களில் பணியாற்றினார், அவருக்கே உரித்தான நகைச்சுவை வசனங்களுடன்.

2008ல் மறைவதற்கு முன்பு, தனது அப்போலோ நாட்களை பகடி செய்து எழுதியிருப்பார். அவர் இறந்த செய்தியை அமெரிக்காவில் தனிமையில் அழுதுகொண்டே கடந்து சென்றேன்.

ரங்கராஜன் என்னும் சுஜாதா, மறக்க முடியாத என் ஆசான்.

- கண்ணன்



source https://www.vikatan.com/news/celebrity/writer-sujatha-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக