காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் இளைஞரோடு திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர், அந்த பெண்ணை கொடுவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 25 வயதான இந்த இளைஞர், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சக மாணவியான இந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த காதல் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் இருவரும் நவனியில் வசித்து வந்துள்ளனர். தமிழ்ச்செல்வன், மரம் வெட்டும் கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அவரின் மனைவி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டின் அருகில் உள்ள மெடிக்கல், சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
Also Read: `201 பள்ளிகள்...26,085 மாணவிகள்!' - பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அமைச்சர்
அப்போது, கடையின் உரிமையாளருக்கும், இந்திராvஉக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட தமிழ்ச்செல்வன், இந்திராவை கண்டித்திருக்கிறார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு கண்டித்து சொல்லியிருக்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வன் கண்டித்த பின்னரும், அவருக்கு தெரியாமல் இந்திரா, திருமணம் தாண்டிய உறவை தொடர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களின் உறவு தொடர்வதை தெரிந்தகொண்ட தமிழ்ச்செல்வன், மனைவியிடம் இது குறித்து கேட்டு, சண்டை போட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகமானபோது ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், கோபத்தில் தனது மனைவியை கொடுவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு, தப்பிச் சென்றதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாகி விட்ட தமிழ்ச்செல்வனை பிடிக்க தனிப்படை அமைத்து, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/in-namakkal-husband-killed-in-wife-in-affair-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக