Ad

சனி, 21 நவம்பர், 2020

`விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிய வேண்டாம்’ - எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம்? #NowAtVikatan

விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிய வேண்டாம்!

இயக்குநர் எஸ்.ஏ.சி., நடிகர் விஜய் பெயரில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிக்கும், தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள், தங்களை அந்தக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார், மேலும், அந்தக் கட்சியின் பொருளாளராக அறிவிக்கப்பட்ட ஷோபா, கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தலைவர் பத்மநாபனும் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

விஜய் | #Vijay65

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே `அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிய வேண்டாம்’ எனத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது!



source https://www.vikatan.com/news/general-news/22-11-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக