Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

மீண்டும் மைக்ரோமேக்ஸ்... புதிய IN ரக மாடல்கள் அறிமுகம்... என்ன ஸ்பெஷல்?

சமீபகாலங்களில் இந்தியாவில் சீனத் தயாரிப்புகளுக்கு எதிரான ஒரு மனநிலை மக்கள் பலரிடத்திலும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து இருக்கும் பதற்றமான சுழலும், சில மாதங்களுக்கு முன் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது ஸ்மார்ட்போன் சந்தையில்தான். இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீன தயாரிப்பு என்பதுதான் இன்று நிதர்சனம். இதற்கு முக்கிய காரணம் போதிய இந்திய நிறுவன மாற்றுகள் இல்லாமல் இருப்பதுதான். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 'ஆத்மநிர்பர் பாரத்' (தற்சார்பு இந்தியா) என்பதை முன்னிலைப்படுத்திப் பேசி வந்தாலும் ஸ்மார்ட்போன் விஷயத்தில் எந்த இந்திய நிறுவனமும் பெரிதும் மக்களை ஈர்க்காமலேயே இருந்துவருகின்றன. இனி இந்த நிலை மாறும் என்கிறது முன்பு பிரபலமாக இருந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ். இன்று அதன் புதிய ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

இந்தப் புதிய 'IN' ரக ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. IN என்பது 'India'வின் சுருக்கம்தானாம். இந்த புது ரக ஸ்மார்ட்போன்களை இன்று ஒரு குட்டி ஆன்லைன் ஈவென்ட் (15 நிமிடங்களில் முடிந்துவிட்டது) மூலம் அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ்.

மைக்ரோமேக்ஸ் IN ஸ்மார்ட்போன்களில் என்ன ஸ்பெஷல்?

இன்றைய நிகழ்வில் IN Note 1, IN 1B என மொத்தம் இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டுமே சீன நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பட்ஜெட் செக்மென்ட் மாடல்கள். முதலில் IN Note 1 பற்றிப் பார்ப்போம்.

6.67-இன்ச் full HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது IN Note 1. இரண்டு போன்களும் மீடியாடெக் புராசஸர்களுடன் வெளிவரும். IN Note 1-ல் சற்றே மேம்பட்ட MediaTek G85 புராசஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5,000 mAh பேட்டரி கொண்ட IN Note 1 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும். ரிவெர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உண்டு. கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறம் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன (48MP + 5MP + 2MP + 2MP). முன்பு ஒரு 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் in note 1 specs

Also Read: இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?

இன்னும் விலை குறைவான IN 1B-ல் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனில் MediaTek G35 புராசஸர் இடம்பெறும். இதிலும் 5,000 mAh பேட்டரிதான். ஆனால் 10W சார்ஜிங் வசதி மட்டுமே கிடைக்கிறது. பின்புறம் மொத்தம் இரண்டு கேமராக்கள்(13MP+13MP), முன்புறம் ஒரு 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

IN 1B ஸ்பெக்ஸ்

இரண்டு போன்களிலுமே எந்த ஒரு தேவையற்ற ஆப்களும். விளம்பரங்களும் இல்லாத ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் கிடைக்கும்.

விலை

IN Note 1

4GB RAM+ 64GB- Rs 10,999

4GB RAM+ 128GB- Rs 12,999

IN 1b

2GB RAM+ 32GB- Rs 6,999

4GB RAM+ 64GB- Rs 7,999

இந்த போன்கள் ஃப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் சொந்த இணையதளத்திலும் நவம்பர் 24-ம் தேதி விற்பனைக்கு வரும்.

மைக்ரோமேக்ஸின் இந்த IN ரக போன்கள் கவர்கின்றனவா, சீன தயாரிப்புகளைத் தவிர்த்து இதை வாங்குவீர்களா... கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!


source https://www.vikatan.com/technology/gadgets/micromax-in-series-smartphones-launched-specs-price-and-other-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக