Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

`வீட்டிலேயே செய்யலாம் சுவையான அதிரசம்!' - அவள் விகடனின் இலவச ஆன்லைன் பயிற்சி

தீபாவளி நெருங்கிவிட்டது! புத்தாடைகள், பட்டாசு வரிசையில் தீபாவளி பலகாரங்களுக்கும் முக்கிய இடம் உண்டு. பண்டிகைக்கு முன்பாக வீடுகளில் விதம்விதமாகப் பலகாரங்கள் செய்யும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறது.

'வீட்டிலேயே செய்யலாம் சுவையான அதிரசம்' - ஆன்லைன் பயிற்சி!

கோவிட்-19 பெருந்தொற்று ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தையும் வீட்டுச் சாப்பாட்டின் அருமையையும் நமக்கு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில் இந்தத் தீபாவளியைத் தித்திப்பாக மாற்ற வீட்டிலேயே எளிதாக சுவையான அதிரசம் செய்வது எப்படி என்ற பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது அவள் விகடன்.

நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் பயிற்சி நடைபெறும். சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி கங்காதரன் நிகழ்வில் கலந்துகொண்டு சுவையான அதிரசத்தைச் செய்துகாட்டவிருக்கிறார். இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பர்ய முறையில் அதிரசம், சீடை, கைமுறுக்கு போன்ற பட்சணங்களைச் செய்து வருகிறார்.

kalyani Gangadaran

பயிற்சியில் எளிதாக அதிரசம் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம், அதிரசம் உடையாமல் வருவதற்கான டிப்ஸ் ஆகியவை வழங்கப்படும். இந்தக் கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/383U7g6



source https://www.vikatan.com/food/food/chance-to-participate-in-aval-vikatan-adhirasam-making-training

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக