Ad

திங்கள், 2 நவம்பர், 2020

`லாக் டெளனுக்கு முந்தைய இரவு; துப்பாக்கிச் சூடு’ - வியன்னாவை அதிர வைத்த தாக்குதல் சம்பவம்

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையாக உயர தொடங்கி உள்ளது. மக்களிடையே கொரோனா அச்சம் மேலும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்தது.

வியன்னா

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், லாக்-டெளன் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய இரவை மக்கள் உணவகங்களிலும் பார்களிலும் செலவு செய்து கொண்டு இருந்தனர். இந்த சூழலில் வியன்னாவில், வெவ்வேறு இடங்கள் நடைபெற்ற துப்பாக்குச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

குறைந்தது 6 இடங்களில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வியன்னாவின் தேவாலயம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்ற போதும், தேவாலயத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடி தனமாக மக்கள் மீது பல முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் மக்களில் பலர் இதனால் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸார் பதில் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு தீவிரவாதி மக்களுடன் மக்களாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வியன்னாவின் சில பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: `2015 கலகம்... பிரான்ஸ் முதல் சவுதி அரேபியா வரை’ - தொடரும் பதற்றம்!

ஆஸ்திரியா ஆளுநர் செபாஸ்டியன் குர்ஸ், இந்த தாக்குதல் சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ``பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது. தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது" என்று தெரிவித்தார்.

Also Read: `தீவிரவாதத்துக்கு எதிரான போரிலிருந்து பிரான்ஸ் ஒருபோதும் பின்வாங்காது!’- இம்மானுவேல் திட்டவட்டம்



source https://www.vikatan.com/government-and-politics/international/night-time-terror-attack-in-vienna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக