Ad

புதன், 4 நவம்பர், 2020

எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவரிடம் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்; ஆளுநர், அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம், சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஏழு பேரையும் விடுவிக்கலாம் என்று தமிழக அரசின் பரிந்துரை விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து தமிழக அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து வந்தன.

சு.வெங்கடேசன்

இந்தநிலையில், இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு மேல் அனுபவித்துவிட்ட அவர்களை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு மேல் அனுபவித்துவிட்ட பின்னரும் அவர்கள் விடுவிக்கப்படாமல் இருப்பது இந்திய நீதித்துறை மீதான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: `பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரிடம் கேட்காதது ஏன்?’ - அற்புதம்மாள் கேள்வி

மேலும், ` ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்ததைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் சு.வெங்கடேசன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எழுவர் விடுதலை

அதேபோல், எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், அந்தக் கடிதத்தின் நகலை , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார்.

Also Read: எழுவர் விடுதலை: தொடரும் சதுரங்க விளையாட்டு... யாரிடம்தான் உள்ளது அதிகாரம்?

கடிதத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ், தண்டனையை ரத்து செய்ய ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஸ்டாலின்

இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் இருப்பதால், அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகிவருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,``ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 9.9.2018-ல் செய்த பரிந்துரையை ஏற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/stalin-writes-to-governer-hm-over-seven-convicts-in-rajiv-case-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக