Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

பாரா பாட்மின்டன் வீராங்கனை மானசி ஜோஷியின் பெயரில் பார்பி பொம்மை... புதிய கௌரவம்!

பொம்மை என்றாலே குழந்தைகளின் முதல் சாய்ஸ் ஹை டெக்கான பார்பி பொம்மை. அந்த பொம்மையில் இருக்கும் அக்ஸசரிஸ் மற்றும் ஆடைகளுக்காகவே அதை விரும்பி வாங்கும் குழந்தைகள் ஏராளம். பொம்மைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்து முதல் முதலாக அடல்ட் பொம்மையாக, ஃபேஷன் டால் என்ற கான்செப்டில் , தனித்துவமான ஆடை, ஆபாரணங்கள், ஹேர் ஸ்டைலுடன் மெட்டால் என்ற அமெரிக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

பார்பி

ஃபேஷன் டாலாக வலம் வந்த பார்பி பொம்மையை அதன் பிறகு ஃபேஷன் டால், இன்ஸ்பயரிங் உமன், கரியர் டால் என்ற கான்செப்ட்களில் வடிவமைக்கத் தொடங்கினர். இதில் இன்ஸ்பயரிங் உமன் கான்செப்ட் பொம்மைகள் உலக அளவில் சாதித்த, மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களின் உருவங்களில் பார்பி பொம்மைகளாகத் தயாரிக்கப்படுகின்றன.

இன்ஸ்பயரிங் உமன் கான்செப்டில் முதல்முறையாக இந்தியப் பெண் மானசி ஜோஷி உருவ பொம்மை வெளியிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த பாரா உலக பாட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மானசி ஜோஷி . பார்பி பொம்மை வெளியிடல் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மானசி

"பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனம் என்னைப் போன்ற உருவ பொம்மை தயாரித்து வெளியிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

இது மற்ற பெண்களுக்கு நிச்சயம் முன் மாதிரியாக இருக்கும். அன்றாடம் சவால்களை எதிர்கொண்டு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.

பார்பி அடல்ட் பொம்மையாக இருந்தாலும், அந்த பொம்மையால் ஈர்க்கப்படுவது குழந்தைகள்தாம். குறிப்பாக, பெண் குழந்தைகள்.

மானசி

நான் 2011-ல் விபத்தைச் சந்தித்து கால்களை இழந்து மீண்டும் எனக்காகப் போராடத் தொடங்கினேன். என்னுடைய வெற்றி என்னுடைய நம்பிக்கையால் மட்டும் உருவானது. என்னைப் போன்று நிறைய வெற்றியாளர்களுக்கு பார்பி பொம்மை வெளியிடப்பட்டுள்ளது. எங்களைப் போன்று சாதித்தவர்களின் பொம்மைகளைப் பார்க்கும்போது நிச்சயம் எங்களின் கதைகளையும் வெற்றிக்கான போராட்டங்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்வார்கள். இது அவர்களுக்கான வெளிச்சமாக அமையும்" என்று கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/oddities/para-badminton-world-champion-manasi-joshi-gets-barbie-doll-named-after-her

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக