தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு, ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களிடம் இருந்து புதிய கொரோனா தொற்று பரவுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த பரவலைத் தடுக்க 6 நாட்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது தெற்கு ஆஸ்திரேலியா அரசு. `ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும். சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது, பொது இடத்தில் உடற்பயிற்சி செய்வது, திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. வணிக நிறுவனங்கள், வணிக மையங்கள் எல்லாம் மூடப்பட்டது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அறிவிப்பு அமலுக்கு வந்த இரண்டு நாட்கள் கழித்து தான் ஒரு உண்மை வெளியானது. ஆட்சியாளர்களை அதிரவைத்த அந்த உண்மை ஒரு "பொய்"
வெளிநாட்டிலிருந்து வரும் மக்களைத் தனிமைப்படுத்தப் பயன்படும் ஹோட்டலில் ஒரு உதவியாளர் வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாநில தலைநகர் அடிலெய்டில் இருபத்தி மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அது பரவலாக வெடிப்பதைத் தவிர்க்க `சர்க்யூட் பிரேக்கர்’ நடவடிக்கைகள் அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரத்தில் திடீரென்று உருவான இந்த ஒரு கிளஸ்டரின் தொடர்புகள் பற்றி விசாரிக்கையில், ஒருவர்,`தான் அந்த கடையில் பீட்சா வாங்கி மட்டும் சென்றதாக’ தெரிவித்துள்ளார். அவ்வளவு குறுகிய நேரத் தொடர்பில் தொற்று ஏற்பட்டுள்ளது என்றால் கிருமியின் வீரியம் வலுத்துள்ளது என்ற முடிவுக்கு வந்த அதிகாரிகள், அதை உடனே தடுக்க இந்தக் கடுமையான ஊரடங்கை அறிவித்தனர்.
ஆனால் அவரை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் சொன்னது பொய் என்பது தெரிய வந்தது. அவர் உணவக விநோயோக பிரிவில் தொடர்ந்து வேலை செய்தது தெரியவந்தது. எனினும் சிறிய அளவிலே பரவல் இருந்திருக்கிறது. இதனால் கிருமியின் வீரியம் அதிகரித்திருக்கலாம் என்ற அதிகாரிகளின் கணிப்பும் பொய்த்தது. அவர் சொன்ன ஒரு பொய்யால் இத்தனை கட்டுப்படுகைளை போட்டதை நினைத்து கவலை கொண்டது அரசு. கடும் கட்டுப்பாடுகள் இந்த சனிக்கிழமையோடு விலக்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கூறும்போது, "ஒருவர் சொல்லும் ஒரு பொய் 1.8 மில்லியன் மக்கள் வாழ்வை பாதிக்கிறது. பொய் சொல்வதற்கு இந்நாட்டில் இதுவரை தண்டனை ஏதும் இல்லை. ஆனால் இந்த நிலையில் அவரது பொய்க்கான தண்டனை அவருக்கு வழங்கப்படும்" என்றார். அந்த மாகாணத்தின் தற்போதைய நிலைப்படி 43 நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விக்டோரியா, மெல்போர்ன் மாகாணங்கள் தொடர்ந்து புதுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/international/south-australia-on-6-day-lockdown-due-to-lie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக