தேர்தல்... இடைத்தேர்தல்!
இந்தியாவில் கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று காலை முதல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் தவிர்த்து, நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கும் , குஜராத்தில் 8 தொகுதிகளுக்கும் , உத்தர பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளுக்கும், சத்தீஷ்கார், தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதிகளுக்கும் என மொத்தம் 54 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
source https://www.vikatan.com/news/general-news/03-11-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக