Ad

வியாழன், 5 நவம்பர், 2020

நீதிமன்றத்திலேயே ரூ.28 லட்சம் முத்திரைத்தாள் மோசடி! - புதுக்கோட்டை அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் 2014-16 ஆண்டு வரை தாக்கலான அசல் வழக்கு ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில், 75 வழக்குகளில் ஆய்வுக் கட்டணமாக செலுத்தப்பட்ட முத்திரைத்தாள்களை ஆய்வு செய்த ஆய்வுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வழக்குகலில் அசல் முத்திரைத்தாள்களுக்குப் பதிலாக, போலி முத்திரைத்தாள்களை தாக்கல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

முத்திரைத்தாள்

அசல் முத்திரைத்தாளுக்குப் பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட முத்திரைத்தாள்களைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் வழக்குகளுக்கு, ரூ.27,66,500 மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்களை நீதிமன்றக் கட்டணமாக செலுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.

Also Read: சொத்து முத்திரைத்தாள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

போலி முத்திரைத்தாள்கள் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம், வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மாவட்ட சார்பு நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி பால்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுபற்றி புகார் மனு கொடுத்தார்.

புதுக்கோட்டை நீதிமன்றம்

மோசடி, போலி முத்திரைத்தாள்கள் தாக்கல் செய்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், இதுபற்றி விசாரித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட வங்கிகள், தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்திலேயே முத்திரைத்தாள் மோசடி செய்யப்பட்ட விவகாரம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/pudukottai-police-investigates-28-lakh-rupees-stamp-paper-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக