கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் குலசேகரம் அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு பகுதியில் பணியாற்றிய நிலையில், தற்போது குலசேகரத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரல்வாய்மொழி பகுதியில் பணிபுரிந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கும் ஆம்புலன்ஸ் செவிலியருக்கும் பழக்கம் ஏற்படுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் நட்பாகி இருவரும் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதுகுறித்து புகார் எழுந்ததால் அந்த நர்ஸ், குலசேகரத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குலசேகரம் அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் செவிலியராகப் பணிபுரிந்த அந்த நர்ஸைப் பார்க்க இளைஞர் ஒருவர் பைக்கில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். கொரோனா காரணமாக உள் நோயாளிகள் அதிகம் அந்த மருத்துவமனையில் உள்ள அனேக அறைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் சும்மாவே கிடக்கின்றன. அந்த அறைகளில் நர்ஸும் அந்த இளைஞரும் நெருக்கமாக இருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
நர்ஸைப் பார்க்க வரும் இளைஞரின் செயலால், குலசேகரம் பகுதி இளைஞர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பைக்கில் வந்த இளைஞரை, சிலர் ரகசியமாக பிந்தொடர்ந்து சென்று கண்காணித்துள்ளனர். அந்த இளைஞரும் 108 ஆம்புலன்ஸ் செவிலியரான இளம் பெண்ணும் அரசு மருத்துவமனையில் காலியாகக் கிடந்த அறைக்குள் சென்றுள்ளார்கள். பின்னர் அவர்கள் உள்பக்கமாக கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது.
Also Read: குமரி: தி.மு.க நிர்வாகி தற்கொலைக்கு போலீஸ் டி.எஸ்.பி காரணமா?! - கடிதம் கொண்டு விசாரணை
இதைக் கண்ட இளைஞர்கள், அந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளனர். பின்னர், அந்த அறைக்குள் யாரோ புகுந்துவிட்டதாக சத்தம்போட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், சிச்சைக்காக வந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு கூடியிருக்கிறார்கள். தகவல் அறிந்து போலீஸாரும் அங்கு சென்றுள்ளனர். பின்னர் போலீஸார் அந்த அறையின் கதவை திறந்தபோது செவிலியர் மட்டும் இருந்திருக்கிறார். `என்னை அறைக்குள் வைத்து யாரோ பூட்டிட்டாங்க’ என சமாளித்துப்பார்த்திருக்கிறார் அந்த செவிலியர்.
ஆனால், அங்கு கூடிய இளைஞர்களோ, பூட்டப்பட்ட அறைக்குள் இருந்த பாத் ரூமை திறந்து பார்க்கும்படி கூறியிருக்கிறார்கள். அந்த பாத்ரூமைத் திறந்து பார்த்தபோது அங்கு பைக்கில் வந்த இளைஞர் மறைந்திருந்தது தெரியவந்திருக்கிறது. பின்னர் செவிலியரான இளம் பெண்ணும், அந்த இளைஞரும் தாங்கள் காதலிப்பதாகவும், அடிக்கடி சந்தித்து பேசுவதாகவும் கூறி கதறி அழுதிருக்கிறார்கள். இதையடுத்து போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
source https://www.vikatan.com/news/tamilnadu/kulasekaram-108-ambulance-nurse-misuses-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக