Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

US election 2020: டொனால்டு ட்ரம்ப் vs ஜோ பைடன்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முந்துவது யார்? #LiveUpdates

தற்போதைய முன்னணி நிலவரம்:

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற 270 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில் தற்போதைய முன்னணி நிலவரம்...

ஜோ பைடன் - 119

டொனால்டு ட்ரம்ப் - 92

Source - The Associated Press

தாமதமாகும் முடிவுகள்..?

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் நேற்று தேர்தல் நாள். கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை கிட்டதட்ட 10 கோடி மக்கள் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தபால் வாக்குகள் இந்த முறை அதிகமாக பதிவான காரணத்தால், இந்த முறை தேர்தல் முடிவுகள் சில பகுதிகளில் தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது!

ட்ரம்ப் vs ஜோ பைடன்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அமெரிக்காவில் வாக்குப்பதிவு தொடங்கியது, கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை கிட்டதட்ட 10 கோடி மக்கள் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் நாளிலும் மக்கள் வரிசையில் இன்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்

ஜோ பைடன், நியூ ஜெர்ஸி பகுதியில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பைடன் தனது சொந்த மாநிலமான டெலவாரே (Delaware) பகுதியிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற 270 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி, ஜோ பைடன் 85 இடங்களிலும், ட்ரம்ப், 55 இடங்களில் வெற்றியை நோக்கி முன்னேறி செல்கின்றனர். வாக்கு சதவீதம் அடிப்படையில் இருவருக்கும் கடுமையாக போட்டி நிலவுகிறது. தற்போதய நிலவரப்படி பைடனுக்கு ஆதரவாக 48.3% வாக்குகளும் ட்ரம்ப்-க்கு ஆதரவாக 50.2% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆரம்ப கட்ட நிலவரம் மட்டுமே!



source https://www.vikatan.com/government-and-politics/international/us-election-2020-trump-vs-biden-live-updates-of-vote-counting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக