Ad

திங்கள், 30 நவம்பர், 2020

குமரிக்கு புயல் எச்சரிக்கை: 161 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலை என்ன?

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி, வரும் 3-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புயலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறுகையில்,``வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் (3.12.2020) அது குமரி மாவட்டத்தை அடையும் என ஐ.எம்.டி.ஏ கூறிவருகிறது. கடைசி நான்கைந்து நாள்களாக இதுபற்றி எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மீனவர்களுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையே எச்சரிக்கை கொடுத்து விட்டோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைக்கு வந்துவிட்டன. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் 161 படகுகள் கரை திரும்ப வேண்டியுள்ளது. கடலோரக் காவல்படை, மீன்வளத் துறை மூலமாக அவர்களைத் தொடர்புகொண்டு வருகிறோம்.

கலெக்டர் அரவிந்த்

கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என எந்தப் பகுதி அருகில் இருக்கிறதோ, அந்தப் பகுதியில் கரை ஒதுங்க அறிவுறுத்தி வருகிறோம். அதுசமந்தமாக தொடர்ந்து ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறோம். நேற்று அவசரக் கடுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஒன்றிய அளவில் ஒன்பது டீம்கள் தயாராக அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

Also Read: நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு! - பொதுப்பணித்துறை எப்படித் திட்டமிட்டது?

மாவட்டம் முழுவதும் 75 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் மூன்று குழுக்கள் வந்துள்ளன. எங்கு தண்ணீர் தேங்கி மீட்புப் பணி தேவைப்படுகிறதோ, அங்கு அந்த டீமை அனுப்பி வைப்போம். மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் -1, சிற்றார் -2 ஆகிய அணைகள் பாதுகாப்பு நிலையில் இருக்கின்றன. பெரிய மழை வந்தாலும் சமாளிக்கும் நிலையில் உள்ளோம்.

பேரிடர் மீட்புக்குழுவினர்

மழை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால் மக்கள் அரிசி, பருப்பு போன்றவைகளை ஒரு வாரத்துக்கான தேவைக்கு வாங்கி வைத்துக் கொள்ளவும். மின் இணைப்புத் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டார்ச், பேட்டரி போன்றவைகளைத் தயாராக வைத்திருப்பது நல்லது. ஒக்கி புயல் திடீரென அடித்தது. ஆனால், இந்த புயல் குறித்து நான்கைந்து நாள்களாகத் தகவல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். 3-ம் தேதி மாலை கனமழை இருக்கும் என்கிறார்கள். இன்று மாலை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் கூறியுள்ளனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/disaster/kanyakumari-collector-speaks-about-cyclone-pre-cautionary-measures

அரசு மருத்துவர்களின் பயோ மெட்ரிக் அட்டண்டன்ஸ் வழக்கு, பறந்த சுற்றறிக்கை... அடுத்து என்ன?

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப் பதிவேட்டில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தும் அரசாணையை கண்டிப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது, சுகாதாரத்துறை செயலாளர் நவம்பர் 27 தேதியிட்ட அவசர சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் இந்த பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவரங்களை கேட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை மற்றும் பணி நேரத்தை கண்காணிக்கும் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது. என்றாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு காரணமாக நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க, அதன் எதிரொலியாக சுகாதாரத்துறை செயலர் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது அரசு மருத்துவர்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்/ Representational Image

தமிழகம் முழுவதும் தற்பொழுது 30 அரசு மருத்துவக்கல்லூரிகள், 45 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், சுமார் 260 தாலுகா மருத்துவமனைகள், சுமார் 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரமும், வருகையும் உறுதிப்படுத்தப்படுவதில்லை. பதிவேட்டில் கையெழுத்து போடும் பழைய நடைமுறையைதான் பெரும்பாலான மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் பின்பற்றி வருகின்றன. இதனால் டாக்டர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது.

Hospital/ Representational Image

அரசு மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் தனியார் மருத்துவமனைகளுக்குப் பணிக்கு சென்றுவிடுவது, தாமதமாக வருவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், முக்கிய சிக்கலான உயிர்காக்கும் சிகிச்சைகளின்போது இணை மற்றும் துணை பேராசிரியர்கள் பணியில் இல்லாமல் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை பணியில் இருக்கச் செய்துவிட்டு, பணி நேரத்தில் மருத்துவனையில் இல்லாமல் தனியார் மருத்துவமனை மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களுக்காகச் சென்றுவிடும் வழக்கம் அதிகரித்தும் வந்தது. இதனால் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் லட்சக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தரமான மருத்துவசேவையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இன்னொரு பக்கம், அனைத்து மருத்துவர்களின் வருகை பதிவேடுகளும், பழைய முறைப்படி அட்டண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு வரும் வழக்கமாகவே இருந்துவந்தது.

Doctor/ Representational Image

இந்தச் சூழலில், 'தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை பதிவேடும் டிஜிட்டல் முறையில் பயோ மெட்ரிக் பதிவேடு முறையை பின்பற்றி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் லட்சக்கணக்கில் செலவு செய்து அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரங்கள் பொருத்தப்படும் பணிகளை ஆரம்பித்தனர். ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இதை பின்பற்றப்படாமல் அலட்சியப்படுத்திவந்தனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சுகாதார உரிமை சமூகச் செயற்பாட்டாளரான ஆனந்த ராஜ், பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தும் அரசாணையை கண்டிப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று, மதுரை உயர் நீதிமன்றத்தில்பொது நலவழக்குத் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஓராண்டுக்கு மேல் விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் கடந்த 25.01.2017 அன்று, 'அரசு மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்வரை மருத்துவர்களின் வருகை மற்றும் பணி முடிந்து செல்லும் நேரத்தை கட்டாயம் பயோ மெட்ரிக் முறையில் பதிவுசெய்ய வழிவகை செய்யும் அரசாணையை நான்கு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டது.

ஆனாலும் இந்த உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயல்படுத்தவில்லை. மனுதாரர் ஆனந்த ராஜ், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து, தமிழக சுகாதாரத்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தன் ஆதாரங்களை சமர்ப்பித்தார். அவரிடம் பேசினோம்.

Anand Raj

''அந்த வழக்கு விசாரணயில் சுகாதாரத்துறை சார்பாக கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. நீதிமன்றமும் அவகாசம் வழங்கியது. ஆனாலும் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் கால தாமதம் செய்துவந்தனர். சுகாதாரத்துறையின் இந்தச் செயல்பாடு குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. உச்சகட்ட நடவடிக்கையாக இப்போது, சுகாதாரத்துறை செயலர் கடந்த நவம்பர் 27 தேதியிட்ட அவசர சுற்றறிக்கையில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ள மருத்துவர்கள் வருகை பதிவு பயோ மெட்ரிக் விவரங்களை கேட்டுள்ளார்'' என்றார். அந்த விவரங்களை நாளை(2.12.2020) சுகாதாரத்துறை தாக்கல்செய்ய உள்ள பரப்பரப்பான கட்டத்தை, இந்த வழக்கு எட்டியுள்ளது. அடுத்து என்ன என்று பார்ப்போம்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/updates-on-the-implementation-of-a-biometric-attendance-system-for-government-doctors-case

திருவாரூர்: இரண்டு விரல்களைக் காட்டிய சிறுவன் - மடக்கிய உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள உள் விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிவாகிகள், ஊர் மக்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானவர்கள் கூடியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை நோக்கி சிறுவர்கள் உற்சாகமாக கை அசைத்தார்கள். அப்போது ஒரு சிறுவனின் கையை, உதயநிதி ஸ்டாலின் சிரித்துக் கொண்டே மடக்கிப் பிடித்தார். இந்த வீடியோவை அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து வருகிறார். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நேற்று மன்னார்குடி அருகே உள்ள வடுவூருக்கு சென்றார். இது விளையாட்டு வீரர்கள் அதிகம் நிறைந்த கிராமமாகும். இங்குள்ள உள் விளையாட்டரங்கில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், கட்சி நிர்வாகிகள், ஊர் மக்கள் என பலரும் கூடியிருந்தனர். மரக்கன்று நடவு செய்து விட்டு, விளையாட்டு அரங்கின் உள்ளே சென்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் பார்வையிடுவதற்காக, சிலம்பாட்டம், கபடி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

Also Read: நிவர் புயல்: `தஞ்சாவூரில்தான் மீண்டும் பயணம் தொடங்கும்!’ - உதயநிதி ஸ்டாலின்

மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கிரின் நீடா, மகிழங்காடு மக்கள் மன்றம், மன்னார்குடி பசுமை கரங்கள், அறம் அமைப்பு, அத்தானியர் இளைஞர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பனை உள்ளிட்ட விதைகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வின் போது மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தார்கள்.

இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம், பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பது தெரிகிறது. அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தை பேசத் தொடங்கியதுமே 800 கோடி என மக்கள் குரல் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியைப் புரிந்து வைத்துள்ளார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என்னிடம் மனு அளித்துள்ளார்கள். இவற்றை தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பேன். இச்சட்டங்களை ரத்து செய்யக்கோரி கட்சித் தலைமை அறிவிக்கும். வரும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக அமையும்’’ என தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்கள், சிறுவர்கள் என பல தரப்பினரும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி உற்சாகமாக கை அசைத்தார்கள். இவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் மிகுந்த உற்சாகத்தோடு இரண்டு விரல்களை மட்டும் காட்டி கை அசைத்தான். அது இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும் என்பதால், சிரித்துக் கொண்டே, அவனது கையை மடக்கி சமாளித்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த வீடியோவை அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/udhayanidhi-stalin-speaks-about-various-issues-in-vaduvur

தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படக் காரணம் என்ன? #Covid-19

உலகமெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்த அச்சத்தில் இருக்கும்போது முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

vaccine trial in South Africa

அவற்றுள் முக்கியமான தடுப்பூசிகளாக,

ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு,

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ஆர்என்ஏ தடுப்பூசி

ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள BNT 162b2,

ரஷ்யாவின் கமேலயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக்

இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்ஸின் மற்றும் நோவாவாக்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன.

ஒவ்வொரு தடுப்பூசியும் மூன்று படிநிலைகளைக் கடந்து அவற்றின் திறனையும் பாதுகாப்பைும் உறுதிசெய்த பின்னரே நம்மை வந்தடையும். தடுப்பூசியின் மனித சோதனையின்போதே பக்கவிளைவுகள் ஏற்படுவது பற்றிக் கேள்விப்படுகிறோம்.

இங்கிலாந்தில் தன்னார்வலராக கோவிஷீல்டு தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொண்ட நபருக்கு மூட்டு பலவீனம் மற்றும் உணர்ச்சி பாதிப்பு ஆகிய நரம்பு சம்பந்தப்பட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வந்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

தற்போது பரிசோதனைக்காகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டதாக வழக்கு தொடுத்துள்ளார். மேலும் அதற்காக ரூ.5 கோடி நிவாரணத் தொகையும் கோரியிருக்கிறார்.

ஒருபுறம் தடுப்பு மருந்து எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உலகமே மூழ்கியிருக்கிறது. மற்றொரு புறம் தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் பற்றிய பயமும் ஆட்கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில்தான் தடுப்பூசிகளால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகள் குறித்தும் அவற்றைச் சரி செய்வது குறித்தும் பேச வேண்டும். ஒருதொற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு ஊசியாகவோ வாய் வழியோ வழங்கப்படும் மருந்துக்குத் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி என்று பெயர்.

ஒரு வினையை உண்டாக்குமாறு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மருந்துக்கும் சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருக்கும். இந்த விதிக்கு தடுப்பூசிகளும் விதிவிலக்கன்று.

இருப்பினும் தடுப்பூசிகள் கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் அனைத்திலும் அவற்றின் பாதுகாப்பு முழு உறுதியுடன் பரிசோதிக்கப்படும்.

Headache

எனினும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்ட பின் ஒருவருக்கு நேரும் ஒவ்வாமை `தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் ஒவ்வாமை நிகழ்வு' AEFI - Adverse Event Following Immunisation என்று சொல்லப்படும். இவை சாதாரண (Minor or mild), தீவிர (severe), அதி தீவிர (serious) பக்கவிளைவுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் கோவிட் நோய்க்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்திலும் ஏற்படும் பக்கவிளைவுகள் சாதாரண அளவிலேயே இருக்கின்றன.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா

தடுப்பூசிகள் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் ஐந்து விதங்களாக நடக்கும்.

1. தடுப்பூசியி்ல் உள்ள மருந்துக்கு எதிராக ஏற்படும் ஒவ்வாமை.

2. தடுப்பூசியைத் தயாரிக்கும் முறைகளில் அதன் தரத்தில் ஏற்படும் குறைவால் உண்டாகும் ஒவ்வாமைகள்.

3. தடுப்பூசியை வழங்கும் முறைகளில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படும் ஒவ்வாமை.

4. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பதற்றம்.

5. தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லாமல் ஒத்த நிகழ்வாக ஏற்படும் ஒவ்வாமை (Coincidence).

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, பக்கவிளைவு ஏற்பட்ட பலருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்ட சில மணிநேரத்துக்கு குளிருடன் காய்ச்சல் இருந்ததாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரை எடுத்தாலே போதுமானதாக இருந்திருக்கிறது. அடுத்த பக்கவிளைவாகத் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் பாராசிட்டமால் மாத்திரையே போதுமானது.

COVID-19 vaccine trial

Also Read: கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

சிலருக்கு குமட்டல் வாந்தி வருவது, தசைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசி ஆய்வில் பங்குபெற்ற எவருக்கும் நேரடியாகத் தடுப்பூசியின் காரணமாக மரணமோ, தீவிரமான மற்றும் அதிதீவிர பக்கவிளைவுகளோ எதுவும் நிகழவில்லை என்பது நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் நிச்சயம் இந்திய மக்களுக்கான பாதுகாப்பான மற்றும் திறன் வாய்ந்த தடுப்பூசியை உறுதி செய்யும் என்று நம்பலாம். 2021-ன் ஆரம்ப மாதங்களில் நம்மிடையே வர இருக்கும் தடுப்பூசிகளில் சிறந்த ஒன்றை அரசு ஏழை எளியோர் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-what-could-be-the-reasons-for-side-effects-of-vaccines

`தமிழகத்தில் களமிறங்கும் ராகுல்!’- கூட்டணி வியூகத்தில் மாற்றமா?

`காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம் அமைப்போம்' என்கிற பா.ஜ.க-வின் கோஷத்துக்கு வலுசேர்த்து வருகிறது சமீபத்திய காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வி முகங்கள். வலுவான தலைமையே எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கரைசேர்க்க முடியும் என்று அந்த கட்சியின் தலைமைக்குள்ளே குரல்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கட்சியைக் கரைசேர்க்க மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு அந்தக் கட்சி ஆட்சியிலிருந்த மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பீகார் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி அமைக்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் இயக்கம் இதுபோன்ற தொடர் சரிவுகளைக் கண்டதில்லை. குறிப்பாகப் பிராந்திய ரீதியாகவே அந்தக் கட்சி தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்து வருகிறது. அந்தக் கட்சி வலுவாக இருந்த மாநிலங்களிலும் மண்ணைக் கவ்வி வருவது அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கே சலிப்பைக் கொடுத்துவிட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல், பதவியை ராஜினாமா செய்தபிறகு தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் உள்ள சோனியா காந்தியால் பெரிய அளவில் செயல்பட முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்கிற குரல்களும் சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே தலைமை குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, `பீகார் தேர்தல் நடந்துகொண்டிருந்த காலத்தில் ராகுல் காந்தி ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்’ என்கிற விமர்சனத்தை அந்த கட்சியினரே வைத்தனர். இது ராகுல் காந்திக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. `காங்கிரஸ் கரைந்து வருகிறது’ என்கிற விமர்சனத்தையும், தனது தலைமை மீதான அதிருப்தியையும் சரி செய்யவேண்டிய நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார்.

ஸ்டாலின், ராகுல்

இந்தநிலையில் அடுத்த ஆண்டு தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைக் கரைசேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுள்ளார். இதனால் மீண்டும் சுறுசுறுப்புடன் களம் இறங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் எப்படியும் கால் ஊன்றிட வேண்டும் என்று நினைக்கிறது பா.ஜ.க. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இடையேதான் மேற்கு வங்கத்தில் போட்டியிருந்தது. ஆனால், மம்தா பானர்ஜி வருகையும், கம்யூனிஸ்ட் கட்சி கலகலத்துப் போனதாலும், பா.ஜ.க அந்த மாநிலத்தில் அசுரத்தனமாக வளர்ந்துவருகிறது. வரும் தேர்தலில் மம்தா மற்றும் பா.ஜ.க-வை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்க்க வியூகம் அமைத்துவருகிறார் ராகுல் காந்தி. சமீபத்தில் அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல், கூட்டணி குறித்தும் பேசியிருக்கிறார். டிசம்பர் மாதம் முதல் மேற்குவங்கத்தில் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இது ஒருபுறம் என்றால், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்துள்ளது. ஆனால், கடந்த முறை போன்று காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என்பதை தி.மு.க தரப்பு சூசகமாகக் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்திவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் எந்த பேரத்திலும் ஈடுபடாது. கூட்டணிக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்” என்று தெரிவித்தார். அதாவது, தி.மு.க கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் மனநிலையே காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது போன்றிருந்தது குண்டு ராவ் பேச்சு. இது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்தியிலே அதிருப்தியை உண்டாக்கியது. இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லியில் புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி சந்திப்பு

இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடித்தால் கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் நிலை மட்டுமே இருக்கும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமையும் நினைக்கிறது. இதனால் தி.மு.கவுக்கு செக் வைக்க வேறு அணியை உருவாக்கலாமா? என்று ராகுல் திட்டமிடுகிறார். தி.மு.க-விலிருந்து காங்கிரஸ் கட்சி கழன்றால் அது தி.மு.க-வுக்கு விழும் சிறுபான்மை வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே கமல் மூன்றாவது அணிக்குத் தயார் என்கிற ரீதியில் இருக்கிறார். மற்றொருபுறம், விடுதலைச் சிறுத்தைகள் வேண்டாம் என்று தி.மு.க-வில் உள்ள மூத்த தலைவர்களே தலைமையிடம் சொல்லியுள்ளார்கள்.

Also Read: ரஜினி, விசிக, கம்யூ... மக்கள் நலக் கூட்டணி 2.0-க்கு தயாராகிறதா மக்கள் நீதி மய்யம்? #2021TNElection

இப்படி தி.மு.க கூட்டணிக்குள் உள்ள அதிருப்திகளை வைத்தே ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆட நினைக்கிறார் ராகுல். இதற்கு முன்னோட்டமாக 30-ம் தேதி அன்று மாநில முக்கிய நிர்வாகிகளை டெல்லி அழைத்து இரண்டு மணிநேரம் ஆலோசனை செய்துள்ளார் ராகுல். இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலை தமிழகத்தில் என்னவாக உள்ளது? எவ்வளவு தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது போன்ற விவரங்களும் பேசப்பட்டுள்ளன. ஏற்கெனவே காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை மாற்றவேண்டும் என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி முயன்று வருகிறார். அதை இப்போதைக்கு ஒத்திப்போட்டுவிட்டு, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

ராகுல்- கே.எஸ்.அழகிரி

அதே போல் தமிழகக் காங்கிரஸார் பிரியங்கா, ராகுல் இருவருமே தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எழுச்சி ஏற்படும் என்று சொல்லியுள்ளார்கள். அதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு ராகுல், ``கூட்டணி விவகாரங்கள் குறித்து நேரம் வரும்போது முடிவெடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த விவரங்களை சோனியாவிடம், தான் தெரிவித்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகவும் சொல்லியுள்ளார்.

அதாவது தி.மு.க, தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்காதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாகக் கமல் உள்ளிட்டவர்களுடன் கைகோர்க்கவும் காங்கிரஸ் தயாராகும் என்று தெரிகிறது. அதேபோல் கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம் என்று தெரிகிறது. எனவே, அந்த மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ராகுல். இப்படி புதிய அரசியல் வியூகங்களை முன்வைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க நினைக்கிறார் ராகுல். இந்த முறையாவது அவரது அரசியல் வியூகம் பலித்து காங்கிரஸ் கட்சி கரைசேரும் என்கிற எதிர்பார்ப்பு கதர் சட்டைக்காரர்களிடம் உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahuls-new-plan-will-there-be-a-change-in-the-alliance-strategy-in-tn

சென்னை: ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்! - ஐ.எம்.இ.ஐ நம்பரால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை பெரம்பூர் நெற்வயல் நகர் ஜெகதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சிவமணி. இவரின் மனைவி கவிதா (46). இவர் கடந்த 21-ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அருகில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதாவின் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுதொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்தார். அதன்பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்போன் பறிப்பு வழக்கில் கைதானவர்கள்

தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிராஜன், செந்தில்குமார் ஆகியோர், செல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்தனர். அப்போது திருடிய செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்கள் மூலம் செல்போன் திருடர்களை போலீஸார் கண்டறிந்தனர்.

அதுதொடர்பாக விசாரித்த போது வியாசர்பாடி எம்.பி.எம் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (29), அவரின் கூட்டாளியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரதாப் (26) எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 42 செல்போன்கள், 4 திருட்டு பைக்குகள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர்.

செல்போன் பறிப்பு வழக்கில் கைதானவர்கள்

Also Read: `ரேடியேஷன் அதிகமாக இருக்கிறது, உள்ளேயே இருங்கள்!' -லேடீஸ் ஹாஸ்டல்களைப் பதறவைத்த செல்போன் திருட்டு

இவர்கள் இருவரும் சேர்ந்து செம்பியம், புளியந்தோப்பு, பேசின்பாலம், கொடுங்கையூர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏழுமலை மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள ஏழுமலையின் கூட்டாளி ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை, பிரதாப் ஆகிய இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-youths-and-seized-10-lakh-rupees-worth-cell-phones

அடுத்த இதழுடன்...



source https://www.vikatan.com/news/announcements/announcement-for-calendar-attachment-with-next-issue

தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கம்பளிநாடார் தெருவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் வாஜித் அகமது (வயது 27), இவர், கடன் பிரச்னை காரணமாக, தன்னிடம் இருந்த 27 பவுன் நகைகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, தேனியைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் அதுபற்றி கூறியிருக்கிறார். அதனைக் கேட்ட அவரது நண்பர், போடி சகாதேவன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகனான லலித்குமாரை, வாஜித் அகமதுவுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

நகை

லலித்குமார், போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாக வாஜித் அகமதுவிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய வாஜித், கடந்த மாதம் 6-ம் தேதி தன்னுடைய 27 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போடிக்கு வந்து, லலித்குமாரைச் சந்தித்துள்ளார்.

Also Read: `சந்தேக நபரை புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

அப்போது, நகைகளை லலித்குமாரிடம் காட்டிவிட்டு, தனது இருசக்கர வாகன கவரில் நகைகளை வைத்துள்ளார். அதனை நோட்டம் விட்ட லலித்குமார், வாஜித் அகமதுவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, இருசக்கர வாகன கவரில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.

மோசடி

சிறிது நேரத்தில், தன்னுடைய நகைகள் திருடப்பட்டதை அறிந்த வாஜித் அகமது, போடி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரிக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த லலித்குமார் தலைமறைவானார்.

Also Read: தேனி: மனைவியுடன் பழக்கம்; குடும்பத்தில் விரிசல்! - உறவினரைக் கத்தியால் குத்திய கணவர்

சுமார் 25 நாள்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த லலித்குமாரை, நேற்று ரோந்துப்பணியில் இருந்த போடி போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாஜித் அகமதுவின் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து லலித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட லலித்குமார்

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது,``எவ்வளவு நகையாக இருந்தாலும் விற்றுத் தருவதாக லலித்குமார் கூறியிருக்கிறார். அதனை வாஜித் அகமது நம்பி ஏமாந்துள்ளார். லலித்குமார், போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், வங்கி நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். வாஜித் அகமது போல, இன்னும் எத்தனை பேரிடம் லலித்குமார் கைவரிசை காட்டியுள்ளார் என விசாரணை நடக்கிறது” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/theni-police-arrested-man-over-gold-ornaments-theft

ஹிட்லிஸ்ட்டில் ஷிவானி, பதறும் பாலாஜி, நிதானிக்கும் ஆரி...பிக்பாஸ் – நாள் 57

சம்யுக்தாவின் வெளியேற்றம் இந்த வார நாமினேஷனில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்... ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷிவானி எவிக்ஷன் பிராசஸ் லிஸ்ட்டில் வந்திருக்கிறார். வாக்காளர்களுக்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம். மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித தனித்தன்மையும், செயலும் இல்லாமல் இருக்கும் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேறினால் ஆட்டம் சூடு பிடிக்கும்.

இதில் குறிப்பாக ஷிவானி வெளியேறினால் பாலாஜியின் பலம் சற்று குறைந்து விடும் போல் தெரிகிறது. அந்தச் சூழலை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று பார்க்க வேண்டும். இதன் எதிர்முனையில் நிஷா வெளியேறினால் அர்ச்சனா குழு எப்படி இயங்குகிறது என்பதையும் பார்க்க ஒரு வாய்ப்பு.

‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ மாதிரி ‘அமாவாசை’ வாய்ப்பு ரமேஷிற்கு அடிக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் எவிக்ஷனிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் இந்த வாரம் கேப்டன் ஆகி, இந்த வார நாமினேஷனில் இருந்தும் தப்பித்திருக்கிறார். முயல் – ஆமை கதை போல் ஆகி விடுமோ?

ஓகே.. 57-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

வேகமான தாளயிசையைக் கொண்ட ஏதோ ஒரு பாட்டு. மார்கழி குளிரில் பச்சைத் தண்ணீரை மேலே ஊற்றினால் குளிரில் உடம்பு ஒரு உதறு உதறும் அல்லவா? ஆரி நடனமாடும் பாணி பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப் பாருங்கள். கிச்சன் மேடையில் ஸ்டைலாக அமர்ந்தபடி டீயை கலக்கிக் கொண்டிருந்தார் ரம்யா. (ச்சே... என்ன பொண்ணுப்பா இது... சமையல் இடத்துல ஒரு பொறுப்பு வேணாம்?!)

'‘கேபியின் மூக்கு எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருக்கிறது'’ என்று ஆராய்ச்சி செய்து பிக்பாஸிடம் ரியோவும் சோமுவும் புகார் அளித்துக் கொண்டிருந்தார்கள். ரம்யாவையும் சோமுவையும் இணைத்து வைத்து “என்னாச்சு... ரெண்டு வாரமா ஃபீலிங்க்ஸ் குறைஞ்சுடுச்சா..?” என்று கேபி கிண்டல் செய்து கொண்டிருந்தார். “பூ போட்ட சட்டை போட்டுப் பாரு... வொர்க் அவுட் ஆகலாம்” என்று அவர் பாலாஜியை குறிப்பிட்டுச் சொன்ன காமெடி சுவாரஸ்யம்.

இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. பாலாஜி, ரமேஷ், ரம்யா ஆகியோர் இதில் இருந்தார்கள். உடல் வலிமையைக் கோரும் போட்டி என்பதால் பாலாஜி இதில் எளிதில் ஜெயித்து விடுவார் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரமேஷ் வென்றது ஆச்சர்யம்.

வெவ்வேறு நிற க்யூப்கள் மேலே வலையில் கொட்டப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் மூவரும் கீழேயிருந்து அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்குள் தள்ளி சேகரிக்க வேண்டும். இதர போட்டியாளர்களின் க்யூப்களை தள்ளி விட்டால் அது இவர்களின் பாயின்ட்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

சற்று சிக்கலான விளையாட்டு. போட்டி துவங்குவதற்கு முன்பே சலசலவென்ற குழப்பம். கேப்டன் ரியோ ஒட்டுமொத்த மேற்பார்வையை பார்க்க, ஆரி, சோம் போட்டியாளர்களை தனித்தனியாக கவனிப்பார்கள்.

கோட்டின் வெளியே விழுந்ததை எடுத்து நைசாக தன் கூடையில் போட்டுக் கொண்டார் ரம்யா. ஒரே களேபரமாக இருந்தது. மூன்று போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் தட்டும் போது, யார் அதில் தவறு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். அந்தந்த அணியின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். பாலாஜியை நோக்கி அனிதா அதிகமாக கத்திக் கொண்டிருந்தார்.

போட்டி முடிந்ததும் ரமேஷ் சேகரித்த க்யூப்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் பாலாஜி இதை ஏற்கவில்லை. தன்னை மேற்பார்வை பார்த்த ஆரியை குறை சொல்ல ஆரம்பித்தார். எனில் ஆரம்பத்திலேயே வேறு நபரை போடச் சொல்லியிருக்கலாம். ரியோ தொடர்ந்து பாலாஜியை கன்வின்ஸ் செய்ய, "சரிப்பா... என்னை விட்ருங்க... நான் சொன்னதை எச்சி தொட்டு அழிச்சிருங்க என்று வெறுத்துப் போனார் ஆரி.

பிக்பாஸ் நாள் 57

வீட்டில் சில குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அழும். பிடிவாதம் செய்யும். மல்லுக்கட்டும். இது அவர்களாக கற்றுக் கொள்ளும் கவனஈர்ப்பு தந்திரம். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன்னையே கவனிக்க வேண்டும் என்று செய்யும் உத்தி. அமைதியான குழந்தைகளுக்கு இது தெரியாமல் ‘தேமே’ என்று அமர்ந்திருக்கும். அழும் குழந்தைகளை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் அவற்றின் அடம் இன்னமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

இப்படியாக பாலாஜியும் கவனஈர்ப்பு தந்திரம் தெரிந்த ஒரு போட்டியாளர். எனவே முடிவுகளை ஒப்புக் கொள்ளாமல் அடம்பிடிக்க ஆரம்பித்தார். தன் முடிவின் மேல் தவறு வந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் ரியோ. பாவம், ஒரு கட்டத்தில் ‘படுத்தே விட்டான்னய்யா’ என்கிற ரேஞ்சிற்கு பாலாஜியிடம் மல்லுக் கட்டியிருந்தார். பிறகு பாவம் பார்த்து ரியோவை ரிலீஸ் செய்த பாலாஜி, ஆரியை மட்டும் மன்னிப்பதாயில்லை.

பாலாஜி ஆட்சேபம் செய்ததை கழித்துப் பார்த்த போதும் ரமேஷின் எண்ணிக்கை அதிகம் வந்தது. எனவே வேண்டாவெறுப்பாக இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு பாலாஜி தள்ளப்பட்டார். ரமேஷ் கேப்டன் ஆனால் அர்ச்சனா குழுவின் ராவடி அதிகமாகி விடும் என்று பாலாஜிக்குத் தெரியும். எனவேதான் இந்த அழும்பு. "தலைவர் ஆனது பிரச்னையில்ல. ஆரி..ப்ரோ மாத்தி மாத்தி பேசினாரு" என்று சனத்திடம் பிறகு அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் நாள் 57
ஆக... ரமேஷ்தான் இந்த வார தலைவர். (என்னவொரு டிவிஸ்ட்!) ‘யாரும் தூங்கக்கூடாது’ என்று அவர் சபையில் அறிவித்த போது போட்டியாளர்களால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. "நீங்களா சொல்றது?!” என்று நக்கலடித்தார் சனம்.

"பாத்ரூம் அணிக்கு ஆள் எடுக்கிறார்கள்’' என்று சொல்லப்பட்டதும் அடித்துப் பிடித்து ஓடி வந்த அனிதா, "அதற்கு ஒரே ஆள்தான்’' என்றதும் வந்த வேகத்திலேயே பின்னால் ஓடி விட்டார். இந்தப் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் ரம்யா. கிச்சன் அதிகாரம் மறுபடியும் அர்ச்சனா குழுவிற்கு வந்தது. கூட நிஷா, கேபி மற்றும் ஆரி இருப்பார்கள். (ராஜமாதா சிவகாமி கெட்டப்பில் தன்னை உணர்ந்திருப்பார் அர்ச்சனா... இனிமேல் அன்பு குழம்பு, அன்பு பொறியல். அன்பு கூட்டு, அன்பு சுக்கா... என்று வீடு முழுக்க அன்பு இறைபடும்).

சோம், ரியோ, அனிதா, சனம் ஆகியோர் பாத்திரம் கழுவும் அணி. மீதமிருப்பவர்கள் ஹவுஸ் கீப்பிங்.

"ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் அணி கேப்டனாக இருக்கலாம்" என்கிற புதிய பாணியை அறிமுகப்படுத்தினார் தலைவர். (பார்றா!). துணைத்தலைவராக பாலாஜியை தேர்ந்தெடுத்தது ஒரு நல்ல முடிவு. ஆனால் இந்தப் பொறுப்பை பாலாஜி ஏற்றுக் கொள்ளவில்லை.

“தூங்கறது. மைக் மாட்டாம இருக்கறது…இதையெல்லாம் நான்தான் அதிகம் செய்வேன். நான் எப்படி இன்னொருத்தருக்கு அட்வைஸ் சொல்ல முடியும்?” என்பது போல் சொல்லி வெளிப்படையாகவே இந்தப் பதவியை மறுத்து விட்டார். “அப்படியும் மீறி பொறுப்பைக் கொடுத்தா நான் செய்ய மாட்டேன். வேணும்னா என்னை நாமினேஷன் பண்ணிக்கோங்க'’ என்று அவர் சொன்னதெல்லாம் பொறுப்பின்மையின் உச்சம். எனவே வேறுவழியில்லாமல் அவரை விட்டுவிட்டு ஆரியின் பரிந்துரையின் பேரில் துணைத் தலைவராக நிஷாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

'‘ரமேஷிற்கு போய் நான் துணைத் தலைவரா?'’ என்கிற ஈகோ பாலாவைத் தடுத்திருக்க வேண்டும். உண்மையில் அதுவொரு நல்ல வாய்ப்பு. அர்ச்சனா குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த பாலாஜிக்கு கிடைத்த நல்ல அஸ்திரம். தனது ஆணவப் போக்கினால் அதை தவற விட்டு விட்டார் பாலாஜி.

பிக்பாஸ் நாள் 57

“மறுபடியும் சொல்றேன் பாலா... முடிவு என்னடோது... இதைப் பத்தி பேசி பேசி பெரிசாக்கிடாதீங்க” என்று ரியோ வந்து மீண்டும் தெளிவுப்படுத்த “நான்தான் மாத்தி மாத்தி சொல்றேன்னு சொன்னேல்ல... நான் சொன்ன கருத்தையெல்லாம் அவைக்குறிப்புல இருந்து நீக்கியாச்சு’' என்று பரிதாபமாக சொன்னார் ஆரி. (‘மாப்பிள்ளை நான்தான்.. சட்டை அவரோடது இல்ல’ என்கிற காமெடி மாதிரி ஆகி விட்டது.)

இந்தப் பிரச்னையை பாலாஜி பிறகு விசாரணை சபையில் இழுப்பார் என்று ரியோவிற்கும் ஆரிக்கும் நன்கு தெரியும். எனவே சர்வ ஜாக்கிரதையாக ஹேண்டில் செய்ய முயற்சித்தார்கள். என்றாலும் பாலாஜி அடங்கவில்லை. "ஆரி பொய் சொல்றார்... மாத்தி மாத்தி பேசறார்" என்று பிறகு ஷிவானியிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார். அதற்கு சற்று நியாயமான எதிர்வினையைத் தந்து கொண்டிருந்தார் ஷிவானி.

நாமினேஷன் வைபவம் ஆரம்பித்தது. தலைவர் ரமேஷை நாமினேட் செய்ய முடியாது. (தப்பிச்சிட்டார்டா!) ‘போனால் போகட்டும் போடா’ பாடலை ஆரம்பத்திலேயே நல்ல சகுனமாக பாடிக் கொண்டிருந்தார் ஆஜீத்.

நாமினேஷனுக்காக தனியறையில் சொல்லப்பட்ட காரணங்களை இந்த முறையும் சபையில் தெரிவித்து கலகம் செய்தார் பிக்பாஸ். இதில் பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் எளிதாக யூகிக்கப்படுவது போலவே இருந்தன. ‘சிரிச்சிக்கிட்டே ஹர்ட் பண்றாங்க’ என்று சொல்லப்பட்ட போது ரம்யா உட்பட வீடே விழுந்து விழுந்து சிரித்தது.

பிக்பாஸ் நாள் 57
வெளியேற்ற நடைமுறைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் இந்த வார பட்டியல்: ஷிவானி, ஆஜீத், ஆரி, ரம்யா, சனம், அனிதா மற்றும் நிஷா.

கட்டுரையின் துவக்கத்தில் சொன்னபடி மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஷிவானி, ஆஜீத், நிஷா ஆகிய மூவரில் எவராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டால் ஆட்டம் சூடுபிடிக்கும். “என்னது லிஸ்ட்ல நான் இல்லையா?” என்று ஆச்சரியப்பட்டார் பாலாஜி.

‘'பாலாஜியின் நிழலாக இருக்கிறார் என்று காரணம் சொல்லப்பட்டதால், நேரடியா என்னைப் பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லையா?” என்று ரம்யாவிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார் ஷிவானி. அந்த வீட்டில் இருக்கும் செட் பிராப்பர்ட்டிகளில் ஒன்று போல இருக்கும் ஷிவானியை தனியாகச் சொல்ல ஏதுமில்லை. அது போல் உருப்படியாக எதையும் அவர் செய்யவில்லை. இதை அவரே உணர்ந்திருக்க வேண்டும்.

ரியோவும் பாலாஜியும் தனியாக ஒதுங்கி கடந்த வார பாலிட்டிக்ஸ் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். "உங்கள் அணியில் அன்பு இருக்கும் போது எங்கள் அணியில் இருக்காதா... தவறான ஆளை நாங்கள் ‘best performer’ ஆக எப்போதும் பரிந்துரைப்பதில்லை…" என்பது போன்ற பழைய விவகாரங்கள்தான். அவரவர்களின் தவறுகளை மழுப்பி நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். "எல்லாக் கோட்டையும் அழிப்போம். புதுசா ஆடுவோம்'’ என்ற சபதத்துடன் விடைபெற்றார் பாலாஜி. (உருப்படியான ஃபுட்டேஜ் இல்லாமல் பிக்பாஸ் எடிட்டிங் டீம் அல்லாடுவது நன்றாகவே தெரிகிறது).

'என்னை எப்படி இந்த வாரம் விட்டு வெச்சானுங்க... இது இலுமினாட்டிங்க சதியா இருக்குமோ?' என்கிற ரேஞ்சிற்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் ரியோ. "அதான் போன வாரம் வெச்சு உன்னை நல்லா அடிச்சாங்கள்ல.. அவங்களுக்கும் போரடிக்கும்ல. வேற ஆளைப் பார்க்க வேணமா?” என்று சோம் கிண்டலடிக்க "டேய் நீங்கள்லாம் எனக்கு உண்மையிலேயே ஃபிரெண்ட்ஸ்தானா... இல்ல நானாதான் அப்படி தப்பா புரிஞ்சிட்டிருக்கேனா?” என்று நொந்து போய் சொன்னார் ரியோ. (நண்பர்களின் வட்டாரங்களில் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ளும் நினைவுகள் பலருக்கும் வந்து போயிருக்கும்).

பிக்பாஸ் நாள் 57

அடுத்ததாக, பற்களின் பாதுகாவலன் என்கிற விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. ஆரி நடுவராக இருக்க, வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து அடித்துக் கொள்ள வேண்டுமாம். பந்துகளை யார் தடுக்கிறார்கள், அடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி. அனிதாவின் மூக்கில் ரமேஷ் பந்தை அடித்தார் என்பதைத் தவிர இந்த டாஸ்க்கில் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

நமக்கு கூட அமாவாசை, பெளர்ணமி எல்லாம் மறந்து விடும் போலிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொன்றையும் துல்லியமாக நினைவு வைத்துக் கொள்கிறார்கள். நமக்கு சந்தேகம் வந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் போல. மக்கள் கார்த்திகை தீபத்தைக் கொண்டாட, அனிதா பாட்டு பாட இன்றைய நாள் முடிந்தது.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-57-highlights

`அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்கிறதா... தங்கத்தின் விலையில் மணல்’ - உயர் நீதிமன்ற மதுரை கிளை

வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வான் மழையையும், எப்போதாவது நிறைந்து வழிந்து வரும் வைகை ஆற்றுத் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும்கூட இதுதான் நிலை. பல ஆண்டுகளுக்கு பின்னர், இந்தாண்டு போதுமான மழை பொழிந்ததுள்ளது. இந்தநிலையில், வழிந்து வரும் ஆற்று நீரை கடைமடைப் பகுதிக்கு வந்துசேர விடாமல் ஆற்றுப்படுகைதோறும் மணல் கொள்ளை தாராளமாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உபரி மணல் என பெயர் வைக்கப்பட்டு முழு பூசணியை மறைப்பது போல் அதிகாரிகளே சட்ட விரோத செயல்களுக்கு உதவியாக இருந்தனர். தி.மு.க., அ.தி.மு.க என கட்சி பாரபட்சம் இன்றி மணல் கொள்ளை நடைபெற்றது என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

மணல் குவாரி

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மணல் கொள்ளை குறித்தும், மணல் விலை ஏற்றம் குறித்தும் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றில், ``மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி என குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.

Also Read: `மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு?’ - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது . அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தற்போது அது நடைமுறையில் தான் உள்ளது" என தெரிவித்தார்.

hc

அதற்கு நீதிபதிகள், ``அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது என்பது தெரியும். ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது?" என்று கேள்வி எழுப்பியதோடு, ``தற்போது மணலின் விலை 45 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அளவு தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது. பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை” என்றனர். தொடர்ந்து நீதிபதிகள், சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-high-court-order-on-sand-rate-issue

ஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள்! - அண்டர் ஆர்ம்ஸ் - 21

ஆக்ரோஷ ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில் அமைதியாய் தான் உண்டு தன் கேம் உண்டு என விளையாடிய ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டர் ஆடம் கில்கிறிஸ்ட். குணத்தில் மட்டும்தான் இவர் அமைதியேத்தவிர பேட்ஸ்மேனாகக் களத்தில் இறங்கிவிட்டால் செயல்புயல். யாரை மிகச்சிறந்த பெளலர் என்கிறார்களோ, யாரை எல்லா பேட்ஸ்மேன்களும் கண்டு மிரள்கிறார்களோ, அந்த பெளலரை டார்கெட் செய்து, அடித்து வெளுத்து எதிரணியின் கெத்தை மொத்தமாகக் காலி செய்வதுதான் கில்கிறிஸ்ட்டின் தனிச்சிறப்பு. கில்கிறிஸ்ட்டின் இடம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுவரை யாராலும் நிரப்பமுடியாத இடமாக வெறுமையுடனேயே இருக்கிறது.

ரிக்கி பான்ட்டிங், ஷேன் வார்னே, டேமியன் மார்ட்டின், வாக் பிரதர்ஸ், ஜேஸன் கில்லெஸ்பி என 90-களின் ஆஸ்திரேலிய அணியில் யாரைப்பார்த்தாலும் வெறுப்பும், கோபமும் வரும். ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த ஆஸ்திரேலிய அணிக்குள் இருந்துகொண்டு அன்பை விதைத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகனையும், தன்னுடைய ரசிகனாக்கிவிடும் வல்லமைப்படைத்த கிரிக்கெட்டர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் - என்கிற பெயருக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர். விக்கெட் கீப்பர் என்றால் எப்படி ஆடவேண்டும் என்பதற்கான உதாரணம் கில்கிறிஸ்ட். 90-களின் கிரிக்கெட் வரலாற்றை கில்கிறிஸ்ட் இல்லாமல் எழுதிவிடமுடியாது!

ஆஸ்திரேலிய அணி என்பது அப்போது தொடர் ஆச்சர்யங்களைக் கொடுக்ககூடிய அணியாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஒரு சிறந்த வீரர் ஓய்வுபெற்றால், அவருக்கு மாற்றாக அவரைவிட மிகவும் சிறந்த இன்னொரு வீரர்தான் வருவார். அப்படி 90-களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் முகமாக இருந்த இயான் ஹீலிக்கு பதிலாக 96-ல் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தவர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்.

ஆடம் கில்கிறிஸ்ட்

மிகப்பெரிய சாதனைகள் படைத்தவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் சறுக்கியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் விதிவிலக்கல்ல. 1996-ல் இந்தியாவில் நடைபெற்ற டைட்டன் கோப்பைத்தொடர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கரியரைத் தொடங்கிவைத்தது. இயான் ஹீலி காயம் அடைந்ததால் ஆடம் கில்கிறிஸ்ட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய கில்கிறிஸ்ட் 22 பந்துகளில் 18 ரன்கள் அடித்துவிட்டு டொனால்ட் பந்துவீச்சில் போல்டானார். அடுத்தப்போட்டியில் முதல் பந்திலேயே ரன் அவுட். இதனால் இரண்டு போட்டிகளோடு கில்கிறிஸ்ட் நீக்கப்பட்டு மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் சேர்க்கப்பட்டார்.

கில்கிறிஸ்ட் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் வர ஒரு வருடம் ஆனது. ஹீலிக்கு இரண்டுப்போட்டிகளில் விளையாடத் தடைவிழுந்ததால் மீண்டும் அணிக்குள் வந்தார் கில்கிறிஸ்ட். ஆனால், இந்தமுறை மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் வந்தபோதும், கில்கிறிஸ்ட்டின் இடம் காலியாகவில்லை. மார்க் வாக் காயமடைந்திருந்ததால் பேட்ஸ்மேனாக அணிக்குள் தொடர்ந்தார் கில்கிறிஸ்ட். இங்கிருந்துதான் கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.

மார்க் டெய்லரை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் தூக்க, மார்க் வாகிற்கு சரியான ஓப்பனிங் பார்ட்னர்கள் இல்லாமல் தவித்தது ஆஸ்திரேலியா. அப்போது லோயர் ஆர்டரில் ஆடிகொண்டிருந்த கில்கிறிஸ்ட்டை ஓப்பனிங் இறக்க முடிவெடுத்தார் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வாக். ஆஸ்திரேலியாவின் பொற்காலம் ஆரம்பமானது. ஓப்பனராகக் களமிறங்கிய இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியவர் அடுத்தடுத்து அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.

1997 - 1998-ல் நடைபெற்ற கார்ல்ட்டன் அண்ட் யுனைடெட் சீரிஸில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் ஆஸ்திரேலியா வந்திருந்தன. இதில் லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மோதிய நான்கு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளால் தட்டுத்தடுமாறி பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. முதல் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மார்க் வாகுடன் ஓப்பனிங் வீரராகக் களமிறக்கப்பட்டார் கில்கிறிஸ்ட். முதல் போட்டியில் மார்க் வாகுக்கும், கில்கிறிஸ்ட்டுக்கும் காம்போ செட் ஆகாமல் மார்க் வாக் 3 ரன்களில் ரன் அவுட் ஆக, கில்கிறிஸ்ட்டும் 20 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா முதல் ஃபைனலில் தோற்றுப்போனது. ஆஸ்திரேலியாவின் கதை முடிந்தது. சொந்த மண்ணிலேயே தொடர் தோல்விகளைச் சந்திக்கிறார்கள், இனி தென்னாப்பிரிக்காதான் கிரிக்கெட்டின் சூப்பர் பவர் என எல்லோரும் நினைத்தநேரத்தில்தான் இரண்டாவது இறுதிப்போட்டியில் இருந்து சூழல் மாறியது.

ஆடம் கில்கிறிஸ்ட், ஜஸ்ட்டின் லேங்கர்

சிட்னியில் நடந்த இரண்டாவது இறுதிப்போட்டியில் மீண்டும் மார்க் வாகோடு ஓப்பனிங் இறங்கினார் கில்கிறிஸ்ட். தென்னாப்பிரிக்காவின் 228 ரன் டார்கெட்டை 42-வது ஓவரில் முடித்தது ஆஸ்திரேலியா. 104 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார் கில்கிறிஸ்ட். ஷான் பொல்லாக், லான்ஸ் க்ளூஸ்னர், ஆலன் டொனால்ட், பேட் சிம்காக்ஸ், மேக்மில்லன், கல்லினன் என மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட சதம் இது.

முதலில் ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் என டெஸ்ட் போட்டிகளில் கில்கிறிஸ்ட்டை சேர்க்காமல் வைத்திருந்தார்கள் ஆஸ்திரேலிய தேர்வாளர்கள். இயான் ஹீலியின் மோசமான ஆட்டம் கில்கிறிஸ்ட்டுக்கு டெஸ்ட்டிலும் இடம்கிடைக்க வழிவகுத்தது. 1999-ல் ஹோபார்ட்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் கில்கிறிஸ்ட்டை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் நிலைநிறுத்தியது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு 369 ரன் டார்கெட்டைக் கொடுத்தது. ஆனால், மார்க் வாக், ஸ்டீவ் வாக், மைக்கேல் ஸ்லேட்டர், ரிக்கி பான்ட்டிங் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எல்லாம் அவுட்டாகி 126 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது ஆஸ்திரேலியா. அப்போது ஜஸ்ட்டின் லேங்கரோடு கூட்டணிப்போட்டு ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்தார் கில்கிறிஸ்ட். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் பிட்ச்சில், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர் என உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கில்கிறிஸ்ட் ஆடிய இன்னிங்ஸை அப்போது நேரிலும், டிவியிலும் கண்டவர்கள் பாக்யசாலிகள். லாங்கரோடு 238 ரன் பார்ட்னர்ஷிப். 163 பந்துகளில் 149 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் நின்று ஆஸ்திரேலியாவை வெற்றிபெறவைத்தார் கில்கிறிஸ்ட். ஆஷஸ் டெஸ்ட்டில் பெர்த் மைதானத்தில் 57 பந்துகளில் கில்கிறிஸ்ட் அடித்த சதம் மிக முக்கியமானது.

வேர்ல்ட் கப் ஸ்பெஷலிஸ்ட்!

1999 இங்கிலாந்து, 2003 தென்னாப்பிரிக்கா, 2007- கரீபியன் என தொடர்ந்து மூன்று உலகக்கோப்பைகளையும் ஆஸ்திரேலிய வெல்ல மிக முக்கியக் காரணம் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த மூன்று உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டியிலும் ஆடம் கில்கிறிஸ்ட்டின் பங்கிருக்கிறது. 1999 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 20 ஓவர்களில் மேட்சை முடித்தது ஆஸ்திரேலியா. ஆடம் கில்கிறிஸ்ட் 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்து டாப் ஸ்கோராரக இருந்ததார்.

ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலிய அணி

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரிக்கி பான்ட்டிங் இந்திய பெளலர்களை ஓடஓட விரட்ட, முதலில் ரூட்மேப் போட்டுக்கொடுத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். 48 பந்துகளில் 57 ரன்கள் அடித்துவிட்டு பான்ட்டிங்கை ''மாப்ள... நீ கவலைப்படாமா ஆடு... பந்தெல்லாம் நேரா பேட்டுக்குத்தான் வருது'' என சொல்லிவிட்டுப்போனார்.

கரீபியனில் 2007-ல் நடந்த உலகக்கோப்பையின்போது தன் அந்திமக் காலத்தில் இருந்தார் கில்கிறிஸ்ட். சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிக்கொண்டிருந்தவர், சரியாக இறுதிப்போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ரிக்கி பான்ட்டிங் கொடுத்த ட்ரீட்மென்ட்டை, இலங்கைக்கு ஆடம் கில்கிறிஸ்ட் கொடுத்தார். 104 பந்துகளில் 149 ரன்கள். 13 பவுண்டரி, 8 சிக்ஸர்கள். பவுண்டரி, சிக்ஸர்களில் மட்டும் 100 ரன்கள் அடித்திருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். தில்ஹாரா ஃபெர்னான்டோ எனும் இலங்கை பெளலரின் அன்றைய கதறல்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மலிங்காவுக்கும் அடி விழுந்தது.

இந்த உலகக்கோப்பை முடிந்ததும் மீண்டும் ஃபார்முக்கு வருவதும் போவதுமாக இருந்தார் கில்கிறிஸ்ட். 2008-ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்ற இரண்டாவது இறுதிப்போட்டிதான் கில்கிறிஸ்ட்டின் கடைசிப்போட்டி. தனது இறுதிப்போட்டியில் 2 ரன்களோடு வெளியேறினார் கில்கிறிஸ்ட்.

ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன்

இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரோடு ஓய்வுமுடிவை அறிவித்தார் கில்கிறிஸ்ட். ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் முதல் பயிற்சியாளர்கள் வரை கில்கிறிஸ்ட்டின் ஓய்வுமுடிவை பரிசீலனை செய்யும்படி கேட்டார்கள். ஆனால், ''லட்சுமணின் கேட்ச்சை டிராப் செய்ததுமே, என் மனம், இனி நீ இந்த விளையாட்டை விளையாடும் முழுத்தகுதியை இழந்துவிட்டாய் என சொல்லிவிட்டது. இனிமேல் நான் தொடர்ந்து விளையாடுவது நியாயமாக இருக்காது'' என்றுசொல்லி ஓய்வுமுடிவை உறுதிசெய்தார் கில்கிறிஸ்ட்.

ஐபிஎல் கேப்டன்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றவர் 2008-ல் தொடங்கிய இந்தியன் பிரிமீயர் லீகில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் வீக்கெட் கீப்பராக மட்டும் இருந்தவர், இரண்டாவது சீசனில் கேப்டன் ஆனார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 இந்தியன் பிரிமியர் லீகில், டெக்கன் சார்ஜர்ஸுக்கு தலைமையேற்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பயைப் பெற்றுத்தந்தார் கில்கிறிஸ்ட். சர்வதேசப் போட்டிகளைப்போல ஐபிஎல்-ல் அவரது இறுதிப்போட்டி ராசி பலிக்கவில்லை. டக் அவுட் ஆனார். ஆனால், இந்தத்தொடரில் 495 ரன்கள் அடித்து, ஸ்டம்ப்பிங், கேட்ச் என 18 விக்கெட்கள் இழக்கக் காரணமாக இருந்து கோப்பையை வென்றுத்தந்தார் கில்கிறிஸ்ட்.

தோனி, சங்ககாரா, பிரன்டன் மெக்கல்லம், க்வின்ட்டன் டி காக், ஏபிடி என உலகின் அத்தனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கும் முன்னோடி ஆடம் கில்கிறிஸ்ட்தான். தாவிப்பறந்து கேட்ச் பிடிப்பதில் ஆகட்டும், மில்லி செகண்ட் வித்தியாசத்தில் ஸ்டம்ப்பிங் செய்வதில் ஆகட்டும், ஓப்பனிங் இறங்கி எதிரணி பெளலர்களின் நம்பிக்கையை சிதைப்பதில் ஆகட்டும், கில்கிறிஸ்ட் எல்லாவற்றிலும் தனி ஒருவன்தான்!



source https://sports.vikatan.com/cricket/life-of-adam-gilchrist-under-arms-21

`மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு?’ - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

7.5% உள் ஒதுக்கீட்டால் பல்வேறு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்லூரிகள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் கல்லூரியில் பயில உள்ள மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே தங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் பணம் செலுத்த முடியாத சூழலில் கல்லுரியை தேர்வு செய்ய முடியாமல் வீடு திரும்பியுள்ளனர் பல ஏழை மாணவர்கள். இதனால் தகுதி இருந்தும், அரசு கட்டணத்தை ஏற்கும் என தெரிவித்த போதிலும் மருத்துவ சீட் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் கலங்குகிறார்கள்.

நீட் தேர்வு

இந்நிலையில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது ஜமீன் என்ற மாணவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வீரசிகாமணி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். என் தந்தை கூலி வேலைகள் செய்து எங்களை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நான் அரசுப் பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு மற்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டேன்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டு பல் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கான கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை அறிந்ததாலும், அன்றைய தினமே சுமார் ரூ.11,000 செலுத்துமாறு கோரியதன் அடிப்படையிலும், அதை செலுத்த இயலாததன் காரணமாக நான் கலந்தாய்வில் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் பயின்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். இந்த தகவல் முன்பே தெரிந்திருந்தால் பல் மருத்துவப் படிப்பிற்கான இடத்தைத் தேர்வு செய்திருப்பேன். குடும்ப வறுமையின் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதன் காரணமாக அன்றைய தினம் தேர்வு செய்யவில்லை. இதுபோல மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல் மருத்துவத்திற்கான இடத்தினை எனக்கு ஒதுக்கி வைக்கவும், இடத்தை தேர்வை செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.


``மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும், 2 நாட்கள் கால அவகாசம் தேவை. நல்ல அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் வரும் காலங்களில் அரசு பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமல்லாது உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இதுகுறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-high-court-on-medical-counselling

ஹைதராபாத்: ஓவைசி vs யோகி - மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், டிசம்பர் 1-ம் தேதியன்று மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காகவே பா.ஜ.க மிக நீண்ட பட்டியலைத் தயாரித்திருந்தது. அந்தப் பட்டியலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஹைதராபாத்தில், பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொண்டு, பேரணியாகச் சென்று தீவிரப் பிரசாரம் நடத்தி வருகிறார்கள்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பேரணியில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``பா.ஜ.க வெற்றிபெற்றால் ஹைதராபாத்துக்கு பாக்யாநகர் எனப் பெயர் மாற்றம் செய்வோம்'' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

ஏற்கெனவே 2018 தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, ``ஹைதராபாத், பாக்யாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்'' என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதியளித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்குப் பல எதிர்ப்புகள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ஓவைசி,

அசாதுதீன் ஒவைசி

மேலும் பேசிய அவர், ``ஹைதராபாத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அவர் என்ன இந்த நகரை கான்ட்ராக்ட் எடுத்துள்ளாரா?... ஹைதராபாத்தின் பெயர் மாற்றப்படாமலிருக்க எங்களுக்கு வாக்களியுங்கள். இது ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் போன்றே தெரியவில்லை. பிரதமர் பதவிக்கு மோடியை மாற்றிவிட்டு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது போன்று தெரிகிறது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இதுவரை பல்வேறு முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். கர்வானில் நான் பிரசாரம் செய்துகொண்டிருந்த போது `பா.ஜ.க பிரசாரத்துக்கு ட்ரம்பையும் அழைத்திருக்க வேண்டும்' என்று ஒரு குழந்தை கூறியது. ஆம்! உண்மையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இன்னும் ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரம் செய்யவில்லை'' என்று பேசியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ``தனி நபர் வருமானத்தில் 28-வது இடத்தில் இருக்கும் மாநிலத்தின் முதல்வர், 5-வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்'' என்றார். மேலும், ``ஹைதராபாத்தில் நிலவும் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் சில பிரிவினைவாத சக்திகள் நகருக்குள் புகுந்துள்ளன'' எனக் கூறிய அவர், ``ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பரப்புரைக்கு வருவது ஏன்?'' என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். சந்திரசேகர் ராவ் எழுப்பியுள்ள கேள்விதான் ஹைதராபாத் மக்கள் மனதிலும் எழுந்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் தெலங்கானா மாநில பா.ஜ.க-வுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே சந்திரசேகர் ராவ், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்து வருகிறார். `ஹைதராபாத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமான கூட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தியே தீருவேன்' என்று உறுதி கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தெலங்கானா மாநிலம் துபக்கா (Dubbaka) சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தை ஆளும் கட்சிகளே வெற்றி பெறும். ஆனால், தெலங்கானாவில் நடைபெற்ற சமீபத்திய இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று சந்திரசேகர் ராவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

சந்திரசேகர் ராவ்

Also Read: டி.ஆர்.எஸ் Vs பா.ஜ.க: `132 கோடி மக்களும் பா.ஜ.கமீது குற்றப்பத்திரிகை பதிய வேண்டும்!' - என்ன பிரச்னை?

கடந்த 2016 ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 150 வார்டுகளில், டி.ஆர்.எஸ் 99 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 44 இடங்களைப் பெற்றிருந்தது. பா.ஜ.க 4 இடங்களையும் காங்கிரஸ் 2 இடங்களையும் தெலுங்கு தேசம் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியிருந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2018 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலிலும் டி.ஆர்.எஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி, மொத்தமுள்ள 119 இடங்களில் 114 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால், அதைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வசமிருந்த 4 முக்கியத் தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க. சமீபத்திய இடைத்தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது, சந்திரசேகர் ராவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் சொல்லப்படுகிறது. சந்திரசேகர் ராவின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு, பா.ஜ.க முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``கீழ் மட்டத்திலிருந்து தங்களைப் பலப்படுத்திக் கொள்வதுதான் பா.ஜ.க கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வரும் ஸ்டைல். ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், ஆளும் கட்சியான சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்-ஸை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டுமென்பதும் ஒரு காரணமாக இருக்கும். ஆனால், இதையெல்லாம்விட முக்கியக் காரணம் ஒன்று இருக்கிறது. தெலங்கானாவில் பலம் பெற்றிருக்கும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை பலம் இழக்கச் செய்வதுதான் அந்த முக்கியக் காரணம். மத அரசியலை முன்னிறுத்தி பா.ஜ.க-வினர் செய்யும் பிரசாரத்திலிருந்து இது தெரிய வருகிறது.

பிரசாரத்தின் போது பேசிய யோகி ஆதித்யநாத் `ஹைதராபாத் மக்களை நிசாம்கள் ஆட்சி செய்கின்றனர். அதிலிருந்து விடுபட நேரம் வந்துவிட்டது' என்று பேசியிருந்தார். இதை வைத்து, ஓவைசியை பலமிழக்கச் செய்வதுதான் பா.ஜ.க-வின் டார்க்கெட் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமீபத்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில், ஓவைசியின் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே, அவரின் வளர்ச்சியைத் தடுக்கத்தான் மதத்தை முன்னிறுத்தி தீவிரமாக மாநகராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பா.ஜ.க'' என்கிறார்கள் உறுதியாக.

பா.ஜ.க கொடி

Also Read: மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

பா.ஜ.க-வினர் இது குறித்துப் பேசுகையில் ``தேசிய அளவில் ஆட்சி செய்து வரும் கட்சியான பா.ஜ.க, எதற்காக ஒரு சில மாநிலங்களில், அதுவும் சொற்ப இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கும் ஒரு கட்சியை பலமிழக்கச் செய்ய வேண்டும். இன்றைய தேதியில் இந்தியாவில், பா.ஜ.க-வைவிட பாலமான கட்சி எதுவுமில்லை. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவதற்கான காரணமே வேறு. ஹைதராபாத் போன்ற ஒரு வளமான நகரத்தின் ஆட்சி நிர்வாகம், மோசமானவர்களின் கையிலிருக்கும் காரணத்தால் அந்த நகரம் வளர்ச்சியடையாமலேயே இருக்கிறது. பாரம்பர்யம் மிக்க ஹைதராபாத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்த வேண்டுமென்பதற்காகத்தான் மாநகராட்சித் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/owaisi-vs-yogi-renaming-issue-of-hyderabad-as-bhagyanagar

இடஒதுக்கீடு போராட்டம்: பெருங்களத்தூரில் பா.ம.க-வினர் தடுத்து நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பு #NowAtVikatan

வலுபெற்றது புயல் சின்னம்!

மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் சின்னம் தற்போது வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு போராட்டம்: பா.ம.க-வினர் தடுத்து நிறுத்தம்!

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பா.ம.க-வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாரை கண்டித்து பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பா.ம.க வினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னையின் பல பகுதிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/general-news/01-12-2020-just-in-live-updates

`சந்தேக நபரை புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 நபர்களுக்கு, FACETAGR செயலி பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FACETAGR செயலி பயிற்சி வகுப்பு

Also Read: டிரைவிங் லைசன்ஸ் மறந்துட்டோமேன்னு இனி கவலை வேண்டாம்..! - ஒரு அசத்தல் செயலி #MyVikatan

பயிற்சி வகுப்பு பற்றி, மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், உடனே, தனது மொபைலில் உள்ள FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தால், அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என அச்செயலி ஒப்பிட்டுக்காட்டும். பழைய குற்றவாளிகளாக இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில், சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையென்றால், அவரை உடனே விடுவிக்க முடியும். இந்த செயலி மூலம், இரவு நேரம் மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACETAGR செயலி பயிற்சி வகுப்பு

Also Read: வாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்னி’ செயலி!

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்னையில் ஈடுபடும் நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா என உடனடியாக அறிந்துகொள்ள FACETAGR செயலி பயன்படும் எனவும், சென்னை மாநகர காவல்துறையினரால் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படும் இந்த செயலி, தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அருகே உள்ள மாவட்டங்களின் குற்றவாளிகளின் விவரங்களும், இந்த செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் எனவும் கூறப்படுகிறது. FACETAGR செயலியானது முழுக்க முழுக்க காவல்துறையினருக்கானது. அதனால், மக்கள் யாரும் இச்செயலியை பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/facetagr-processor-introduced-in-the-police-department-in-dindigul

இந்த வார ராசிபலன் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-for-the-period-of-december-1st-to-6th