Ad

புதன், 23 நவம்பர், 2022

FIFA World Cup 2022 Round Up: `நாய் போல் உடலை அசை!' கோச்சின் உத்தரவு டு சவுதி மன்னரின் அறிவிப்பு வரை

1. கடந்த திங்கள்கிழமை, வேல்ஸ் அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி,  அல் ரயானில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண LGBTQ சமூகத்திற்கு ஆதரவாக வானவில் சட்டை அணிந்து கொண்டு அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால் வந்துள்ளார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு விதிமுறையின் காரணமாக  அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், அனுமதி வழங்க வேண்டுமெனில் டி-சர்ட்டை கழற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

2. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வீரர்கள் 'one love' என்ற வாசகம் பொறித்த கைப்பட்டையை அணிந்துகொண்டு விளையாட ஜெர்மனி உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய அணிகளுக்கு, FIFA அமைப்பு தடை செய்துள்ளது. ஏற்கெனவே, 'லவ்' என்கிற வாசகம் பொறித்த  டி-சர்ட்டை அணிந்து கொண்டு விளையாட பெல்ஜியம் அணிக்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக ஜெர்மனி அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Frappart


3.  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஸ்டெபானி ஃப்ராபார்ட் , ஆண்களுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2020ம் ஆண்டில் நடைபெற்ற ஆண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில், முதல் பெண் நடுவராக பணியாற்றியுள்ளார். 38 வயதான இவர், பிரெஞ்சு லீக் 1 போட்டிகளிலும், இரண்டாம் கட்ட ஐரோப்பிய லீக் போட்டிகளிலும் நடுவராக இருந்துள்ளார்.


4. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சவுதி அரேபியா அணி வீழ்த்தியது. சவுதி அரேபியாவின் பயிற்சியாளரான ஹேர்வே ரெனார்ட் பயிற்சிகளின் போது கண்டிப்புடன் நடந்துக்கொள்ளக்கூடியவராம். ஜிம்மில் வீரர்கள் 'Plank' வகையிலான உடற்பயிற்சிகளை செய்யும் போது ஹேர்வே ரெனார்ட், 'நாயைப் போல உடலை அசையுங்கள்' என்றெல்லாம் கமெண்ட் அடிப்பாராம்.


5. நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில், உலகின் முன்னணி அணியான அர்ஜென்டினா,  சவுதி அரேபியா அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா வீழ்த்தியது.  இந்த வெற்றி கால்பந்து ரசிகர்களை வியப்படையச் செய்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதி அரேபியா மன்னர் இன்றைய தினத்தை நாடு முழுவதும் பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளார்.



source https://sports.vikatan.com/football/fifa-worldcup-daily-round-up-23-11-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக