வித்தியாசமான திறமைகளை மட்டுமல்லாமல், விநோதமாகத் தனித்த இயல்போடு உள்ள மனிதர்களையும் கின்னஸ் உலக சாதனை அங்கீகரித்து வருகிறது.
அந்த வகையில் வரலாற்றில், கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர், தற்போது ஒரு ட்விட்டர் பதிவால் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறார். ஹிஸ்டாரிக் விட்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், இவர் குறித்த பதிவு நவம்பர் 12-ம் தேதி வெளியாகியுள்ளது.
Ripley’s Believe It Or Not அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது மெழுகுத்தலை புகைப்படத்தைப் பதிவிட்டு, ``தாமஸ் வாட்ஹவுஸ் (Thomas Wadhouse) 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில சர்க்கஸ் கலைஞர். இவர் உலகிலேயே நீளமான மூக்கு கொண்டவராக பிரபலமாக அறியப்படுகிறார். இவரின் மூக்கு 7.5 இன்ச் (19 செ.மீ) நீளம் கொண்டது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, பலரும் இதற்கு கமென்டுகளை தெறிக்கவிட்டு வந்தனர். இந்நிலையில் இவர் அனிமேஷன் கதாபாத்திரமான Squidward Tentacles-களை நினைவுபடுத்துவதாகப் பலரும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கின்னஸ் உலக சாதனை இணையதள பக்கத்திலும், ``1770களில் இங்கிலாந்தில் வாழ்ந்த தாமஸ் வெட்டர்ஸ் என்பவர் 19 சென்டிமீட்டர் (7.5 இன்ச்) நீளமுள்ள மூக்கை கொண்டிருந்தார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/oddities/international/historic-world-long-nose-man-pics-goes-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக