நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அரவங்காடு பகுதியில் கார்டைட் வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்டைட்டை மூலப்பொருளாக கொண்டு இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் 1,000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெடிமருந்தகளை கையாளும் சி.டி பிரிவு எனப்படும் கார்டைட் டிவிஷனில் இன்று காலை 8:30 மணி வாக்கில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்த தொழிற்சாலை நிர்வாகம் அபாய சைரனை அழுத்தி தொழிலாளர்களை உஷார் படுத்தி வெளியேற்றினர். சி.டி பிரிவில் வெடி விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 8 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
அதிக சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தால் இவர்களின் காதுகள் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறப்பு பரிசோதனை செய்து வருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து பாதுகாப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/cordite-factory-blast-near-coonoor-few-injured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக