Ad

புதன், 16 நவம்பர், 2022

மும்பை தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா நடிகை தமன்னா?!

நடிகை ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. ஹன்சிகாவின் திருமணம் ராஜஸ்தான் கோட்டையில் நடைபெற இருக்கிறது. அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. மும்பையை சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபரை திருமணம் செய்ய தமன்னா பாடியா சம்மதித்து இருப்பதாகவும், அத்தொழிலதிபரை கடந்த சில ஆண்டுகளாக தமன்னாவுக்கு தெரியும் என்றும் செய்தி வெளியானது.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படம்

இதற்காக தமன்னா புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இச்செய்தி வெளியாகி சில மணி நேரத்தில் தமன்னா இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் தனது பிஸ்னஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு ''#திருமணம், வதந்தி, #அனைவரும்எனது வாழ்க்கையை எழுதுகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் வடிவத்தில் தமன்னாவின் படம் இடம் பெற்று இருந்தது.

இதற்கு முன்பும் தமன்னா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தனது 14 வயதில் நடிப்பு துறைக்கு வந்த தமன்னா தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், திருமணம் என்பது வெற்றிக்கான அளவுகோல் கிடையாது. திருமணம் என்பது ஒருவர் தனது வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் விஷயமாகும். இது இனிமையானதாகவும், அழகானதாகும் மாற்றும். அதனால் ஒருவர் திருமணம் செய்து கொள்ளவேண்டும். சிலருக்கு முன்பே இது நடந்திருக்கும். சிலருக்கு இனி நடக்கும். சிலர் அதனை விரும்பாமல் இருக்கலாம். திருமணத்தை விட வாழ்க்கையில் நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/cinema/actress-tamannaahs-instagram-post-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக