Ad

செவ்வாய், 15 நவம்பர், 2022

8 பில்லியனை தொட்ட உலக மக்கள்தொகை; அடுத்தாண்டு சீனாவை முந்தும் இந்தியா- ஐ.நா. அறிக்கை சொல்வதென்ன?

மக்கள் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வறுமை, பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, நோய்கள் போன்றவையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. 

இந்நிலையில், ``உலக மக்கள் தொகை நவம்பர் 15-ம் தேதி 8 பில்லியனை எட்டும்’’ என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்

இந்தாண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தின் போது, ஐக்கிய நாடுகள் World Population Prospects 2022 - ஐ வெளியிட்டது. இதில் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    

அந்த அறிக்கையின்படி, ``நவம்பர் 15 -ம் தேதிக்குள் உலக மக்கள் தொகை 8 பில்லியனை அடையும். வரும் 2023-ம் ஆண்டில் சீனாவுக்கு பதிலாக இந்தியா தான், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும். 

2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 8.5 பில்லியனாகவும், 2050-ல் 9.7 பில்லியனாகவும், 2080-களில் 10.4 பில்லியனாகவும் அதிகரிக்கக் கூடும். 

2050-ம் ஆண்டு வரை உயரும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் இருப்பார்கள்.  மக்கள்தொகை அதிகரிக்கும் அதே சமயம் நாம் தொழில்நுட்ப ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ``இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், தாய்- சேய் இறப்பு விகிதங்களை வியத்தகு முறையில் குறைத்ததோடு, மனிதர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட ஆரோக்கிய முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்குமான நல்ல சந்தர்ப்பம்.. 

அதே நேரத்தில், பிரபஞ்சத்தை கவனித்துக் கொள்வதற்கான நமது பகிரப்பட்ட பொறுப்பையும் இது நினைவூட்டுகிறது. ஒருவருக்கொருவர் நம் கடமைகளை எங்கே தவறவிடுகிறோம் என்பது பற்றிச் சிந்திக்கவும் இது ஒரு தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 



source https://www.vikatan.com/social-affairs/international/india-will-replace-china-as-the-world-s-most-populous-nation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக