"மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு" என்ற செய்தியை படித்ததும் அட... நாம் எதிர்பார்த்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் நீண்ட நாட்களாக பலரால் வைக்கப்படும் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்கிற வருத்தமும் இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், "பள்ளி பாட புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயரொட்டுகளாக இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம்" - என்று பத்திரிக்கைகள் சொன்னதும் பலரும் இந்த மாற்றத்தை வரவேற்றனர். தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி அவர்கள் இது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாற்றம் அல்ல... அதிமுக ஆட்சியில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மாற்றம் என்று தெரிவித்தார். அப்போது முதலே பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். அதில் மிக முக்கியமாக தனது கருத்தை மிக உண்மையாக அழுத்தமாக பதிவு செய்தவர் எழுத்தாளர் சோ. தர்மன்.
’சூல்’ நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் சோ. தர்மன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது:
"ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி, கம்மவார் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, இல்லத்துப் பிள்ளைமார் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சேனைத்தலைவர் ஆரம்பப் பள்ளி... இதுமாதிரி இன்னும் நிறைய்ய இருக்கலாம்.
நெற்றியில் எழுதி ஒட்டியது மாதிரி ஜாதிப் பெயர்களை தாங்கி நிற்கும் இவற்றின் பெயர்களை மாற்றுவதில் என்ன சிக்கல்? இதுவரை எந்த அரசும் இதுபற்றி யோசிக்கவே இல்லையே... இவையனைத்துமே அரசு உதவி பெறும் பள்ளிகளே. இந்தமாதிரியான ஜாதிச்சங்கங்களால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அத்தனை பேரும் அந்த ஜாதியைச் சேர்ந்த நபர்களாகவே இருப்பார்கள். இட ஒதுக்கீட்டில் வந்த ஒன்றோ இரண்டோ பட்டியல் இனத்தவர் பல லட்சம் கொடுத்தே பணிக்கு வந்திருப்பார். அந்த பல லட்சம் அந்த ஜாதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
பெயர்களின் பின் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்குவது மாதிரி பள்ளிகளின் இந்த ஜாதிப் பெயர்களையும் மாற்றலாமே."
பலருடைய கவனத்தை பெற்ற இந்தப் பதிவு கண்டிப்பாக முதல்வர் பார்வைக்கும் செல்லும் உடனடி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை மாற்றம் எதுவும் நடக்கவில்லை.
source https://www.vikatan.com/social-affairs/education/caste-in-school-names
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக