Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

எதற்கும் துணிந்தவன் Exclusive: "முதல்ல, சூர்யாகிட்ட வேற ஒரு கதை சொல்லிருந்தேன். ஆனா..."- பாண்டிராஜ்

"சினிமால டைரக்டர் ஆகி பதிமூன்று வருஷம் ஆச்சு. என்னோட பத்தாவது படம் 'எதற்கும் துணிந்தவன்'. சென்ட்டிமென்ட், ஆக்‌ஷன் படங்களெல்லாம் பண்ணியிருக்கேன். ஆனா, இது வரைக்கும் கமர்ஷியலான மாஸ் படங்களைக் கொடுத்ததில்ல. இது 'எதற்கும் துணிந்தவன்'ல இருக்கும். பெரிய மாற்றம் எனக்கு கொடுத்திருக்கு. கதைக்குள்ள பார்த்து பழகுன விஷயங்களைத்தான் சொல்லியிருக்கேன்.

'எதற்கும் துணிந்தவன்' டீம்

'படத்துக்கு வராதவங்களெல்லாம் பாண்டிராஜ் படத்தை பார்க்க வந்திருக்காங்க'னு தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களெல்லாம் சொல்லி கேட்டிருக்கேன். இதை என்னோட பொறுப்பா பார்க்குறேன். பேமிலி ஆடியன்ஸ் மற்றும் இளைஞர்களுக்குப் பிடித்த படமாகத்தான் 'எதற்கும் துணிந்தவன்' இருக்கும். இதுவரைக்கும் என்னோட படங்கள் எல்லாத்துக்கும் 'யு' சான்றிதழ் கிடைச்சிருக்கு. ஆனா, இந்தப் படம் யு/ஏ சான்றிதழ்ல் வந்திருக்கு. ஏன்னா, படத்துல சொல்லியிருக்குற விஷயம்னால. ரொம்ப பொறுப்பான படமா பண்ணியிருக்கேன்" எனப் படபடவென பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

சன் பிக்சர்ஸ், சூர்யா என அசத்தல் காம்போவில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை எடுத்திருப்பவர், இப்போது அதன் ரிலிஸுக்குத்தான் வெயிட்டிங். அவரிடம் பேசியதிலிருந்து...

Also Read: “பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

இந்தப் படத்துல வசனத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பீங்கனு நினைக்குறோம்...

எதற்கும் துணிந்தவன்

"எப்போவும் என்னோட படங்கள்ல வர்ற மாதிரியான பழைய பார்மெட் ஸ்டைல்ல எழுதல. ரொம்ப ஷார்ப்பா இருக்கும். ஹீரோவும், ஹீரோயினும் பேசுற டயலாக்ஸ் பார்க்குற ஆடியன்ஸூக்கு நல்ல கனெக்ட் ஆகும். சூர்யா சார் ரொம்ப அழகாகப் பேசியிருப்பார். டப்பிங் பேசுறப்போ ரசிச்சு ரசிச்சு பேசினார். கிட்டதட்ட நாலு மாடுலேஷன் வரைக்கும் பேசிக் காட்டுவார். ரொம்ப எதார்த்தமா டயலாக்ஸ் எழுதியிருக்கேன். ஹீரோக்காக சில வசனங்கள் எதிர்பார்க்கலாம். முக்கியமா, சூர்யா சார் ரசிகர்களுக்கு பிடிக்கும்."

கதையை கேட்டவுடனே சூர்யா என்ன சொன்னார்?

இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா

"சூர்யா சாருக்காக எழுதுன கதை வேற. அதை கேட்டுட்டு சூர்யாவும் நடிக்க ரெடியா இருந்தார். பெரிய பட்ஜெட் அதுக்காகத் தேவைப்பட்டிருக்கும். பெரிய உழைப்பும் தேவைப்பட்டிருக்கும். இதுவரைக்கும் எனக்கு இருந்த பார்மெட் உடைக்குறதுக்காக ரெடி பண்ணி வெச்சிருந்த கதை. ரெண்டு மூணு வருஷமா இதை வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இந்தக் கதையை சன் நிறுவனத்துக்கு பண்ணலாம்னு போனேன். முதல்ல காவியா மேடம் கதை கேட்டாங்க. ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க. 'சூர்யா சார்க்கு புதுசா இருக்கும்'னு பாராட்டுனாங்க. அடுத்து கலாநிதி மாறன் சார் கேட்டார். 'ரொம்ப நல்லாயிருக்கு'னுனார். ஆனா, 'சூர்யா சாரை வேறொரு வில்லேஜ்க்கு கூப்பிட்டு போலாம்'னு சொன்னார். அப்புறம் திரும்பவும் சூர்யா சார்கிட்ட போயிட்டு, 'எதற்கும் துணிந்தவன்' கதையை சொன்னேன். இதுவும் சாருக்குப் பிடிச்சிருந்தது. 'ஓகே சார், இதை பண்ணிரலாம்'னார். இப்படிதான் 'எதற்கும் துணிந்தவன்' சூர்யா வசமானது. ஒளிப்பதிவு, இசை, எடிட், கலையா படத்துக்கு எல்லாரும் முழு உழைப்பையும் கொடுத்திருக்காங்க. நல்ல டீம் வொர்க்!"

பிரியங்கா மோகன் எப்படி ஹீரோயினா உள்ளே வந்தாங்க?

எதற்கும் துணிந்தவன்

"மக்களுக்கு நல்ல தெரிஞ்ச முகம், இல்லைன்னா தெரியாத முகம் யாரை ஹீரோயினா கொண்டு வரலாம்னு பேச்சு வார்த்தை போயிட்டு இருந்தது. அப்போ தெலுங்குல 'கேங்லீடர்' படத்தை பார்த்தேன். பிரியங்கா மோகன் நடிச்சிருந்தாங்க. அப்போ, தமிழ்ல 'டாக்டர்' படத்துல பிரியங்கா மோகன் நடிச்சிட்டு இருந்தாங்க. சிவகார்த்திகேயன்கிட்ட 'எப்படி நடிக்குறாங்க'னு கேட்டேன். நல்ல விதமா சொன்னார். அப்புறம் பிரியங்கா மோகனுக்கு லுக் மற்றும் டயாலக்ஸ் டெஸ்ட் வெச்சோம். நல்ல பண்ணுனாங்க. இந்தக் கதைக்கு சரியா பொருந்தி போயிட்டாங்க. பொண்ணுங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரியான காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. ரொம்ப அழகாக நடிப்பை வெளிப்படுத்துனாங்க. ஒரு காட்சி பேப்பர்ல இருந்து கன்வெட் ஆகுறப்போதே டைரக்ஷன் பண்றவங்களுக்கு தெரிஞ்சிரும். இதை பிரியா சரியா பண்ணிட்டாங்க."

பெரிய ஆர்டிஸ்ட் எல்லாருமே இருக்காங்களே?

எதற்கும் துணிந்தவன்

"ஒவ்வொரு ஸ்க்ரிப்ட் எழுதும் போதும், 'பெரிய கூட்டத்தை வெச்சிட்டு படம் பண்ண கூடாதுனு' நினைப்பேன். ஆனா, என்னையும் மீறி சில விஷயங்கள் வந்திரும். ஏன்னா, கதை ஒவ்வொரு விஷயத்தையும் கேட்க ஆரம்பிச்சிரும். இப்படிதான் 'எதற்கும் துணிந்தவன்' படத்துல கூட்டமும் அதிகமாகிருச்சு. சொல்லபோனா, முந்தைய படங்களை விட நட்சத்திரங்கள் இதுல அதிகம். கொரோனா தொற்று நேரத்துல நிறைய ஆர்டிஸ்ட் வெச்சிட்டு படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம். படம் தொடங்கும் போதே சூர்யா சார்க்கு கொரோனா வந்துருச்சு. இதுவே, எங்களுக்கு வருத்தமா இருந்தது. புரொடக்‌ஷன்ல இருந்து டாக்டர் எப்போவும் ஸ்பாட்ல இருந்துக்கிட்டே இருப்பாங்க. டெஸ்ட் எடுத்துக்கிட்டே இருப்பாங்க. எப்போவும் மாஸ்க் போட்டுக்கிட்டுதான் இருப்போம். புரொடக்‌ஷன்ல ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கிட்டாங்க.

காரைக்குடில பங்களானு ஹோட்டல் இருந்தது. இதுல தங்கியிருந்தப்போ சுத்தி பார்த்தேன். அழகா இருந்தது. இதையே வீடா மாத்தலாம்னு ஓனர்கிட்ட கேட்டேன். எங்களுக்காக ஒத்துக்கிட்டாங்க. ஹோட்டல் ரூம்ல இருந்து வெளியே வந்தா வாசல்ல ஷாட் இருக்கும். 'இப்படியொரு ஷூட்டிங் போனதே இல்லனு' சரண்யா மேடம் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. சூர்யா சார் வந்து நடிச்சிட்டு அப்படியே ரூம்க்கு போயிருவார். கேரவன் பயன்படுத்தவே இல்ல. இருபத்து அஞ்சு நாள் வரைக்கும் இப்படிதான் போச்சு. ஹோட்டலுக்கு பின்னாடி இருந்த இடத்துல டான்ஸ், பைட்டு, சீன்ஸூக்கு பதினொரு செட் போட்டோம். இதெல்லாம் கூட்டம் இருந்தாலும் எங்களை பாதுகாப்பா வெச்சிருச்சு. முக்கியமா, படத்துல இருக்குற எல்லா ஆர்ஸ்டிஸ்ட்டும் ஒரே ஃபிரேம்ல காட்ட ரொம்ப கஷ்டப்படுவோம். எல்லாரையும் சரியா பேலன்ஸ் பண்ணனும். அந்த மேஜிக் இதுல நடந்துருக்கு!"

உங்க பையன் 'அண்ணாத்தா' படத்துல நடிச்சிருந்தாரே?

இயக்குநர் பாண்டிராஜின் மகன்

Also Read: "அய்யோ அய்யோ என்னத்த சொல்றது..."- சீரியலைவிட்டு வெளியேறிய ஆர்டிஸ்டுகள்; வைரலாகும் இயக்குநரின் பதிவு!

"சூப்பர் ஸ்டார் கூட சேர்ந்து போட்டோ எடுத்துட்டு வந்திருந்தான். குடும்பத்துல இருக்குற எல்லாரும் ரொம்ப சந்தோஷமா பார்த்தோம். 'நம்ம வீட்டு பிள்ளை' படம் பார்த்துட்டு டைரக்டர் சிவா சார் போன் பண்ணுனார். 'தம்பியை படத்துல நடிக்க வைக்கணும்னு'னார். 'பையன் இப்போ நடிக்க வேண்டாம்னு' எங்க வீட்டுல முடிவு பண்ணியிருந்தோம். இதனால, வேண்டாம்னு சொன்னேன். முதல்ல 'அண்ணாத்தா' படம் முழுக்க வர்ற மாதிரி தம்பிக்கு சீன்ஸ் வெச்சிருந்தார். அப்புறம் என்னோட பதில்னால ஒரு காட்சில மட்டும் நடிக்க வைக்கக் கூப்பிட்டார். சூப்பர் ஸ்டார் படம், பிடிச்ச டைரக்டர் சிவா கேட்குறார். நம்ம கம்பெனி சன் டிவி எல்லாம் சரியா இருந்தது. சரின்னு ஒத்துக்கிட்டேன். ஏன்னா, தம்பியோட வாழ்க்கையில முக்கியமான விஷயமா இந்தப் படம் இருக்கும். என்னோட பசங்க சினிமாக்குள்ள வராம வெளியே போகணும்னு ஆசைப்படுறேன். ஆனா, பசங்க என்ன நினைக்குறாங்கனு தெரியல."

'எதற்கும் துணிந்தவன்' பான் இந்தியா படமா வெளிவருதே?

எதற்கும் துணிந்தவன்

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியன்ஸூக்காகத்தான் ஆரம்பிச்சோம். ஆனா, படத்துல சொல்லியிருக்குற பிரச்னை எல்லா மொழிக்கும் பொருந்தும். இதனால, பான் இந்தியா படமா எடுக்கலாம்னு புரொடக்‌ஷன்ல கேட்டாங்க. சூர்யா சாரின் முந்தைய ரெண்டு படங்களும் எல்லா மொழி மக்களாலும் பேசப்பட்டுச்சு. சொல்லப்போனா, 'ஜெய் பீம்' தமிழ் காட்டிலும் இந்தில நல்ல ஹிட்டாச்சு. இதனால, புரொடக்‌ஷன்ஸ் பான் இந்தியா படமா வெளியிடலாம்னு முடிவு பண்ணுனாங்க. எப்போவும் என்னோட படங்கள்ல நேட்டிவிட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்குள்ள இந்த யோசனை ஓடிக்கிட்டே இருந்தது. ஆனா, பான் இந்தியா படங்களை தமிழ் ஆடியன்ஸ் அதோட மண் வாசனையோட ஏத்துக்குறாங்க. இதனால, எனக்கும் இது சரின்னு தோணுச்சு."



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-pandiraj-exclusive-interview-about-etharkkum-thunindhavan-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக