இந்தியாவில் வேலையின்மை, வியாபார நஷ்டம் மற்றும் கடன்சுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலறிக்கையில், NCRB தரவுகளின்படி, ``2018 -ம் ஆண்டு வேலையின்மை காரணமாக 2,741 தற்கொலைகளும், வியாபார நஷ்டம் அல்லது கடன் சுமை காரணமாக 4,970 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. அதே போல 2019 -ம் ஆண்டு வேலையின்மையால் 2,851 தற்கொலைகளும், வியாபார நஷ்டம், கடன் சுமையால் 5,908 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2020 -ம் ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிய வருடம் என்பதால் தற்கொலை செய்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே உள்ளது. 2020-ம் ஆண்டில் வேலையின்மை காரணமாக 3,548 தற்கொலைகளும், வியாபார நஷ்டம் அல்லது கடன் சுமை காரணமாக 5,213 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க அரசு National Mental Health Program என்ற நிகழ்வை நடத்திவருகிறது. மேலும் இந்த திட்டத்தை மாவட்ட அளவிலும் விரிவாக்கம் செய்துள்ளது" என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
Also Read: நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதை தவிர வேற வழியில்ல!
source https://www.vikatan.com/news/india/unemployment-suicide-ncrp-information-by-home-ministry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக