Ad

சனி, 21 நவம்பர், 2020

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்! - என்ன என்ன ஆவணங்கள் தேவை? #TNElection2021

தமிழகத்தில், கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அது முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் பயனுக்காக தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்ய சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்று, முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களில் பகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது.

சிறப்பு முகாம் நடைபெற உள்ள தேதிகள்

நவம்பர் மாதம்

21.11.2020

22.11.2020

28.11.2020

29.11.2020

டிசம்பர் மாதம்

05.12.2020

06.12.2020

12.12.2020

13.12.2020

புதிதாகப் பெயர் சேர்க்கப் படிவம் 6, பெயர் நீக்கப் படிவம் 7, திருத்தம் செய்யப் படிவம் 8, மற்றும் சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8-A படிவத்தை நிரப்பி, தேவையான ஆவண ஆதாரங்களில் நகலை இணைத்து, உங்களின் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகரிடம் 15.12.2020-க்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

முகவரி சான்று (கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2. ஓட்டுநர் உரிமம்

3. குடிநீர் வரி ரசீது

4. தொலைப்பேசி ரசீது

5. மின் கட்டணம் ரசீது

6. காஸ் இணைப்பு ரசீது

7. ஆதார் அட்டை

8. தபால் அலுவலக கணக்கு புத்தகம்

9. குடும்ப அட்டை

10. வருமான வரி ஒப்படைப்பு சான்று

11. வாடகை ஒப்பந்தம்

12. வங்கிக் கணக்கு புத்தகம்

13. கிசான் பத்திரம்

01.01-2021 அன்று 18 வயது பூர்த்தியடைவோரும், புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (01.01.2003-ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள்)

வயது சான்று (கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1. 5,8 மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்

2. பிறப்பு சான்றிதழ்

3. PAN கார்டு

4. ஆதார் கார்டு

5. ஓட்டுநர் உரிமம்

6. பாஸ்போர்ட்

7. கிசான் அட்டை

அடையாள சான்று (கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1. PAN கார்டு

2. ஓட்டுநர் உரிமம்

3. குடும்ப அட்டை

4. பாஸ்போர்ட்

5. வங்கிக் கணக்கு புத்தகம் போட்டோ உடன்

6. 10ம் வகுப்பு சான்றிதழ்

7. மாணவர் அடையாள அட்டை

8. ஆதார் அட்டை

சென்னை வாசிகள் கவனத்திற்கு:

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குச்சாவடிகள் அடங்கிய 902 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்களுக்குச் செல்ல முடியாதவரால் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல், திருத்துதலைச் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/election/special-camp-for-adding-and-correcting-new-names-in-the-voter-list

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக