Ad

சனி, 21 நவம்பர், 2020

உதயநிதியை உசுப்பேற்றுகிறதா ஐ-பேக்?! - பிரசாரத்தின் போது நடந்த கைதின் பின்னணி

தமிழகம் முழுக்க தேர்தல் அலை வீசத் துவங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான திட்டமிடல்களும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தி.மு.க- வும் நேற்றைய தினம் தனது பிரசாரத்தை துவங்கிவிட்டது. 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என தேர்தல் பரப்புரைக்கான திட்டம் வகுத்து 15,000 கி.மீ பயணம், 1,500 கூட்டம், 15 தலைவர்கள் என மெகா பிரசார பயணத்துக்குத் தயாராகிவிட்டது. கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் தி.மு.க வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தைத் துவங்கினார். பிரசாரத்தின்போது கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். உதயநிதியின் இந்த பிரசாரத்துக்கு முழுக்கவே ஐ-பேக் டீம் உதயநிதிக்கு தனியாக ஒரு செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது.

திருச்சியில் உதயநிதி

நேற்றைய தினத்தின் பிரசாரத்துக்கு முன்பே உதயநிதியை கைது செய்யப்போகிறார்கள் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், 'பிரசாரத்தை தள்ளி வைக்கலாமா?' என உதயநிதி தரப்பிலிருந்து ஐ-பேக் டீ மிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், கைது செய்யட்டும் , கைதுக்கு பிறகு மறுநாளும் பிரசாரத்துக்குத் தயாராகுங்கள் என ஐ-பேக் டீமிடமிருந்து உத்தரவு பறந்துள்ளது. அதுமட்டுமின்றி உதயநிதியின் கூடவே பயணிக்க ஒரு வீடியோ டீமையும் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி உதயநிதி கைதாவது குறித்த வீடியோ , புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி உதயநிதியை தி.மு.க -வின் முகமாக இந்த தேர்தலில் உருவாக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது ஐ-பேக் டீம். உதயநிதி ஐ-பேக்கின் ஆலோசனையோடு , தனக்கென தான் வைத்திருக்கும் ஐ-டி டீமின் ஆலோசனையையும் கேட்டு தனது பிரசாரத்தை தொடர்ந்து வருகிறார்.



source https://www.vikatan.com/news/politics/strategy-behind-udhayanidhi-stalins-arrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக