Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடுக்கடுக்கான பலன்கள்... ரஷ்ய அனுபவங்களைப் பகிரும் விஞ்ஞானி!

``என்னதான் உழைச்சாலும் உழைப்புக்கேத்த பலன் இல்லைங்க'' இது பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ள விவசாயிகள், இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார்கள். நீடித்த நிலைத்த வெற்றியைப் பெற்று, நிறைவான வருமானம் பார்க்கிறார்கள். நெல் சாகுபடியோடு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவையிலும் ஈடும்படும்போது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவாகப் பயன் அளிக்கிறது. இதனால் செலவு மற்றும் உழைப்பு குறைந்து, பல வழிகளிலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது.

நேரலை பயிற்சி

இந்நிலையில்தான் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விவசாயத்தில் உழைப்புக்கேற்ற லாபம் ஈட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கும் வழிகாட்டும் வகையில் பசுமை விகடன் ஏற்பாட்டில் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் நேரலை [ஆன்லைன்] பயிற்சி நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் வழிகாட்டுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையத்தில் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் உதயகுமார், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இயற்கை விவசாயத்தில் முக்கியப் பங்காற்றி வரும் திறன்மிகு நுண்ணுயிரியைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்ததில் இவருடைய பங்கு முதன்மையானது.

வேளாண் ஆராய்ச்சியில் நீண்ட அனுபவம் பெற்ற இவர், மைசூரில் உள்ள மத்திய பட்டு வளர்ச்சி வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும் பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் திட்ட அலுவலராகவும் பணியாற்றியவர். ரஷ்ய பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண் அறிவியல் பயின்ற முனைவர் உதயகுமார், ரஷ்ய விவசாயிகளின் வேளாண் தொழில்நுட்பங்களையும் அங்குள்ள ஒருங்கிணைந்த பண்ணையங்களையும் ஆழமாக உற்று நோக்கியவர். இ.எம் என்று சொல்லப்படும் திறன் உயிரி பயன்பாடு சம்பந்தமாக நீண்ட கால அனுபவம் கொண்டவர்.

ரஷ்ய விவசாயிகள் மேற்கொள்ளும் பயிற்சி சுழற்சி முறை, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை என இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

வேளாண் விஞ்ஞானி உதயகுமார்

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அவசியம் குறித்து பேசும் இவர் `இதனால் நிலத்தின் வளம் அதிகரிக்கிறது, ரசாயன உரங்களுக்கான தேவை குறைகிறது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, பல்லுயிர் பெருக்கம் ஏற்படுகிறது, தண்ணீர் மிச்சப்படுத்தப்படுகிறது’ என இதன் பலன்களை அடுக்கிக்கொண்டேபோகிறார். இவை குறித்து நேரலை நிகழ்ச்சியில் இன்னும் விரிவான தகவல்களை வழங்க இருக்கிறார்.

நவம்பர் 8-ம் தேதி காலை 10-12 மணி வரை நடைபெறும் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்வு தங்களின் முன்னேற்றத்துக்கு பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கும்.

நாள்: 8.11.2020 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 8 மணி முதல் 10 மணி வரை

கட்டணம்: 250 ரூபாய்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/news/agriculture/scientist-udhayakumar-shares-his-integrated-farming-experience-in-online-training

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக