Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

கடலூர்: `45 சவரன், கார் வரதட்சனை போதவில்லை!’ - குரூப் 2 பெண் அதிகாரியின் விபரீத முடிவு

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்திருக்கும் சின்னதானக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மூத்த மகள் சுசிதா கிருபாநிலானி. குரூப் 2 அதிகாரியான இவர் கடலூர் கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவநாதன் மகன் சந்தோஷ்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் சந்தோஷ்குமார், ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

தற்கொலை

ஆனாலும், திருமணத்துக்கு வரதட்சணையாக 50 சவரன் நகை, 1 கார் வேண்டும் என்று கேட்டு கறார் காட்டியிருக்கின்றனர் சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர். சுசிதா கிருபா நிலானியின் குடும்பத்தினரும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. அப்போது, `இப்போ 45 சவரன் போட்டிருக்கிறோம். கொஞ்ச நாள்ல மீதி 5 சவரன் போட்டுடறோம்’ என்று மணமகன் வீட்டில் தெரிவித்த சுசிதா கிருபா நிலானியின் பெற்றோர்கள், தவணை முறையில் அவரது பெயரில் காரும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது அதற்கு சம்மதம் தெரிவித்த சந்தோஷ்குமாரும், அவரது குடும்பத்தினரும் திருமணமான ஒருசில நாள்களிலேயே மீதி 5 சவரன் நகையைக் கேட்டிருக்கிறார்கள். இருவரும் தினமும் நகையைக் கேட்டு வாக்குவாதம் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சுசிதா கிருபா நிலானி, தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதிருக்கிறார். அதற்கு, `சீக்கிரம் எப்படியாவது 5 பவுன் ரெடி பண்ணிடறோம்’ என்று அவர்கள் ஆறுதல் கூறியிருக்கின்றனர். இந்நிலையில்தான் கடந்த சனிக்கிழமை தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற சுசிதா ஞாயிற்றுக்கிழமை அங்கேயே தங்கிவிட்டு, திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வழக்கம்போல, கணவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, `யாருடன் சென்று சுற்றிவிட்டு வருகிறாய்?’ என்று கேட்டிருக்கிறார் சந்தோஷ்குமாரின் தாய் இந்திரா.

சந்தோஷ்குமாரின் வீடு

அதில், அதிர்ந்துபோன சுசிதா,`என்னை சந்தேகப்பட்டு தப்பு தப்பா பேசுகிறார்கள்’ என்று தனது பெற்றோர்களிம் செல்போனில் அழுதிருக்கிறார். அதற்கு,`நாங்கள் வந்து பேசுகிறோம்’ என்று தெரிவித்திருக்கின்றனர் அவரது பெற்றோர்கள். இந்நிலையில்தான் நேற்று காலை தனது கணவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கிறார் சுசிதா கிருபா நிலானி. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சுசிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா ஆகியோரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

கடலூர் டி.எஸ்.பி சாந்தியிடம் பேசினோம். ``அந்தப் பெண் குரூப் 2 அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இரண்டு மாதத்துக்கு முன்புதான் அவர்களுக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அப்போது வரதட்சணையாக 50 பவுன் நகையும், காரும் கேட்டிருக்கின்றனர் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் திருமணத்தின்போது 45 பவுன் நகை மட்டுமே போட்ட பெண் வீட்டினர், `5 பவுனை விரைவில் தருகிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

Also Read: சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு

ஆனால் அதனைக் கேட்டு தினமும் தொல்லை செய்திருக்கிறார்கள் சந்தோஷ்குமாரும் அவரது தாயாரும். இரு தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்குச் சென்று திரும்பிய சுசிதாவை சந்தேகப்பட்டு பேசியிருக்கிறார் அவரது மாமியார் இந்திரா. அதையடுத்துதான் சுசிதா. தற்போது சந்தோஷ்குமார் அவரது தாய் இந்திரா இருவரையும் கைது செய்திருக்கிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/cuddalore-group-2-woman-officer-commits-suicide-over-dowry-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக