Ad

வியாழன், 5 நவம்பர், 2020

ஏழு தமிழர்கள் விடுதலை: `2000 -ல் நடந்தது என்ன?’ - ஸ்டாலினுக்கு ஃபிளாஷ்பேக் சொன்ன முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். கோவை மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி

Also Read: கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

அரசு இந்த விஷயத்தை எல்லாம் கவனித்து, அதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இன்டர்நெட் பயன்பாடு அசுரவேகத்தில் வளர்ந்து வரும்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களை குறிவைத்து இணையவழி விளையாட்டுகள் இயங்கி வருகின்றன.

பொது மக்களின் நன்மையை கருதி, இதுபோன்று அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், அவற்றை நடத்துபவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். அவருக்கு உண்மையில் அவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் 2000-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடியது. நளினியை தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது என்று அதில் முடிவெடுத்தனர்.

ஏழு தமிழர்கள்

கோரிக்கையை நிராகரிப்பது என்றால், நீதிமன்றம் சொல்வதை அமல்படுத்துவோம் என்று தான் பொருள். அப்போது, தண்டனை கொடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டு, இப்போது விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். ஏழு பேர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அ.தி.மு.க அரசுதான். நாங்கள்தான் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அது ஆளுநரின் அதிகாரத்துக்குட்டபட்டது என்பதால், அவர்தான் முடிவெடுக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி ஊர்வலம் நடத்த சட்டரீதியாக அனுமதிக்க முடியாது. அந்த சட்டத்தின் அடிப்படையில்தான். பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கவில்லை. பெயர் இல்லாத போஸ்டர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கொரோனா குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி

அது எங்களின் கவனத்துக்கு வந்ததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தோம். அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறோம். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்” என்றார். முன்னதாக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chief-minister-edappadi-palanisamy-press-meet-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக