Ad

திங்கள், 7 நவம்பர், 2022

விலகியது மர்மம்... தாலிபன்களின் தலைவர் முல்லா உமர் இறப்பு முதல் கல்லறை வரை... வெளியான தகவல்கள்

1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாலிபன் அமைப்பின் நிறுவனர் முல்லா உமர் மரணம் தொடர்பான மர்மம் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று முல்லா உமரை கெளரவிக்கும் விதமாக சிறு விழாவை அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஆப்கானிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் அவருடைய மரணம் தொடர்பான பல்வேறு மர்மங்கள் நீங்கியிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முல்லா உமர் கல்லறை

இது தொடர்பாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம், ``ஜாபுல் மாகாணத்தின், சூரி மாவட்டத்தில் உள்ள ஓமர்சோவுக்கு அருகிலுள்ள அவருடைய கல்லறையில், நேற்று முல்லா உமரை கௌரவிக்கும் வகையில் ஒரு சிறிய விழா நடத்தப்பட்டது. அவருடைய மரணம் பற்றிய செய்திகளை மிக ரகசியமாகவே வைத்திருந்தோம். ஏனென்றால், அப்போது அவரைச் சுற்றி நிறைய எதிரிகள் இருந்தனர்.

மேலும், நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதனால், கல்லறைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க அது ரகசியமாக வைக்கப்பட்டது. முல்லா உமர் 2013-ல் தனது 55 வயதில் இறந்தார். முல்லா உமர் புதைக்கப்பட்ட இடம் பற்றி நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது ஆட்சி கைக்கு வந்த பிறகு அதை வெளிபடுத்தியிருக்கிறோம். விரைவில் மக்களின் பார்வைக்கு திறந்து விட திட்டமிட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் முல்லா உமரின் கல்லறை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அவருடைய கல்லறை பச்சை உலோகக் கூண்டால் மூடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/taliban-founder-mullah-omars-death-kept-secret-for-years-burial-place-finally-revealed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக