பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரிடம் கனடா பாஸ்போர்ட் இருக்கிறது. இதனால் அவரைப் பலரும் கனடா பிரஜை என்று விமர்சிப்பதுண்டு. அதோடு கனடாவில் அதிக அளவில் முதலீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுவதுண்டு. கடந்த 2019ம் ஆண்டே தனது கனடா பாஸ்போர்ட்டைத் திரும்ப ஒப்படைப்பேன் என்று அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் இதுவரை அதனை ஒப்படைக்கவில்லை. கனடா குடியுரிமை வைத்திருப்பதால் 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்கக்கூடாது என்று சிலர் குறிப்பிட்டனர். இதுகுறித்து மீண்டும் அக்ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அக்ஷய் குமார், எனது கனடா குடியுரிமையை திரும்ப ஒப்படைப்பதற்கானப் பணிகளை முடித்துவிட்டேன். என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருக்கிறது என்பதற்காக நான் குறைந்த இந்தியன் கிடையாது. கனடா பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க விண்ணப்பித்துவிட்டேன். இடையில் கொரோனா பொதுமுடக்கம் வந்துவிட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பணிகளும் நடக்கவில்லை. எனது கனடா குடியுரிமையை கைவிட்டதற்கான கடிதம் கிடைத்துவிட்டது. அதே போல் விரைவில் புதிய பாஸ்போர்ட் கிடைக்கும். தேவையில்லாமல் இப்பிரச்னை அடிக்கடி இழுக்கப்படுகிறது. என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை நான் மறைக்கவில்லை.
அப்படி இருக்கும் போது ஏன் தேவையில்லாமல் இப்பிரச்னையை எழுப்புகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக நான் கனடாவிற்கே செல்லவில்லை. இந்தியாவில் தான் பணிபுரிகிறேன். அனைத்து விதமான வரிகளையும் கட்டுகிறேன். நான் இந்தியா மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன் என்பதை யாருக்கும் நிரூபித்து காட்டவேண்டிய அவசியம் இல்லை" என்று வருத்தப்பட்டார்.
source https://cinema.vikatan.com/bollywood/actor-akshay-kumar-has-explained-why-he-continues-to-hold-a-canadian-passport
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக