கர்நாடாகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகளை உருவாக்கி வருவதை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
காலை முதல் மழை தொடர்ந்து பெய்துக்கொண்டடிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மழை நீர் தேங்கியதால் ஆர்ப்பாட்டம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கும் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் அப்போதும் பெய்துக்கொண்டிருந்த தூறல் மழையில் நினைத்தப்படியே பங்கேற்றனர். மழை காரணமாக நேர நெருக்கடி கருதி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விழிப்புணர்வு முழுக்கங்களை எழுப்பினார். பிறகு பிரபல பெண்ணிய செயல்பாட்டாளரும், பேச்சாளருமான நாகை. வேம்பு பாலா பேசினார்.
Also Read: விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!
அவர் பேசுகையில், ``ஹிஜாப் என்பது பெண்கள் தற்காப்புக்காக அணியும் மேலாடை. அது முஸ்லிம் பெண்களின் கலாசார உரிமை. அவர்களுக்கு பிடித்திருப்பதால் அதை அணிகிறார்கள். சட்டம் இதற்கு அனுமதிக்கிறது. ஒரு மாணவியை அவளின் ஆடை கலாசாரத்திற்காக சுற்றி வளைத்து மிரட்டுவது கோழைத்தனம்.
இப்போதுதான் முஸ்லிம் பெண்கள் படிக்க வருகிறார்கள். இது போன்ற செயல்கள் அதை தடுப்பது போல இருக்கிறது. அச்சுறுத்தலை பற்றி கவலை படாமல் தன்னந்தனியே அந்த மாணவி முழங்கியது சுயமரியாதைக்கான முழக்கம். அவர்கள் தங்கள் பண்பாட்டு ஆடைகளோடு கல்வி கூடங்களுக்கு வருவதை இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? பெண் கல்வியை தடுக்க முனைவது குற்றம். ஹிஜாபை அனுமதிக்காத கல்வி கூடங்கள் நாட்டுக்கு தேவையில்லை” என்றார் காட்டமாக!
source https://www.vikatan.com/news/tamilnadu/hijab-issue-protest-in-nagappattinam-district-by-mjk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக