Ad

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: திருவாரூரை தொடர்ந்து நாகையிலும் விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், ``மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியினால் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

மேலும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்."

இன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்

அதேபோல் வரும் 13ம் தேதி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொய்யக்கூடும். 14ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1-8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Also Read: `முதல்வரிடம் மழை நிவாரணம் குறித்துக் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதா?' - நாராயணசாமி காட்டம்!



source https://www.vikatan.com/news/tamilnadu/light-to-heavy-rain-in-tamilnadu-regional-center-announced

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக