மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் 2026-ல் நிறைவடையும் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2019- ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்குப் பின் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அறிவிக்கப்பட்ட பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்டப் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன். ஆனால், தமிழகத்தில் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, லோக்சபாவில் எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ``கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும்" எனக் கூறினார்.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: `3 செங்கல்லை வைத்து, 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள்' - மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜோதிமணி
source https://www.vikatan.com/government-and-politics/politics/madurai-aiims-will-be-completed-by-oct-2026-union-govt-in-parliament
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக